Cinema News
ரஜினியை விட விஜய்க்கு அதிகம்!.. களத்தில் இறங்கி கொளுத்திப்போட்ட ராமராஜன்!…
விஜய் நடித்த வாரிசு படம் வெளியான போது அந்த படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ ஒரு பேட்டியில் ‘விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்’ என சொல்லி அது பற்றிக்கொண்டது. மேலும், வாரிசு பட விழாவில் பேசிய நடிகர் சரத்குமாரும் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான் சொல்ல பரபரப்பானது.
இதையடுத்து யார் சூப்பர்ஸ்டார் என்கிற விவாதம் சமூகவலைத்தளங்களில் எழுந்த்து. சினிமா பத்திரிக்கையாளர்கள் பல யுடியூப் சேனலில் இது பற்றி பேசினார்கள். ஒருபக்கம் விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொண்டனர். அதோடு, ஜெய்லர் பட விழாவில் பருந்து – காக்கா கதையை ரஜினி சொல்ல விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
இதையும் படிங்க: ஜெய்லர், லியோ எல்லாத்தையும் ஓரங்கட்டுங்க! இனிமே எங்க ஆட்டம்தான் – அறிவிப்பை வெளியிட்ட பிக்பாஸ் சீசன் 7
இதற்கு இடையில் ஜெயிலர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படம் வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் ரூ.375 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நி்றுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
விரைவில் இப்படம் ரூ.500 கோடியை தொட்டுவிடும் என திரையுலகில் பேசி வருகின்றனர் இந்நிலையில், 90களில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்த நடிகர் ராமராஜன் ரஜினி, விஜய் பற்றி ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய படங்களின் வியாபாரம் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வெறித்தனமாக களமிறங்கும் வேட்டையன்!.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்!.. சும்மா தெறி!…
ஜெயிலர் படம் நல்ல வசூலை பெறுவதாக கேள்விப்பட்டேன். இந்த வயதில் ரஜினி இப்படி ஒரு ஹிட் படம் கொடுப்பதை பாராட்டியே ஆகவேண்டும். அதேநேரம் நான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை’ என ராமராஜன் கூறியுள்ளார். மேலும் விஜய் பற்றி பேசிய அவர் ‘ லியோ படத்தின் ஃப்ரி பிஸ்னஸ் பற்றியும் கேள்விப்பட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது’ என கூறியுள்ளார்.
ரஜினியா? விஜயா? யார் சூப்பர்ஸ்டார் என பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ராமராஜனின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தன் மகனுக்காக தானே களத்தில் இறங்கப் போகும் விஜயகாந்த் – வருடம் கழித்து ரசிகர்களை சந்திக்கும் அந்த நாள்