நடிகையுடன் ராமராஜனுக்கு தொடர்பு? சந்தேகப்பட்டு சிங்கப்பூர் வரை ஃபாலோ பண்ணி போன நளினி...

Nalini, Ramarajan
ராமராஜனைப் பற்றியும் அவரது திரை உலக பயணங்கள் பற்றியும் மூத்த பத்திரிகையாளர் பரமேஸ்வரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ராமராஜன் ராமநாராயணனிடம் 20 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவரது நோக்கமே இயக்குனராவது தான். மண்ணுக்கேத்த பொண்ணு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். மருதாணி என்ற ஒரு படத்தையும் இயக்கினார். அடுத்து ரெண்டு மூணு படம் பண்ணினார். ஆனால் அதெல்லாம் பேர் சொல்லவில்லை. மண்ணுக்கேத்த பொண்ணு படம் மட்டும் ஹிட்.
நம்ம ஊரு நல்ல ஊரு படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது. கங்கை அமரன் ராமராஜனை நல்லா கவனித்து வந்தார். தயாரிப்பாளர் சங்கிலி முருகனிடம் ராமராஜன் இன்னும் 10 வருஷத்துல டாப்ல வருவான். அவனை கையில புடிச்சிப் போடு என்று சொல்கிறார்.
அப்படி உருவானது தான் எங்க ஊரு பாட்டுக்காரன். கங்கை அமரன் டைரக்ஷன் பண்ணினார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 86களில் தான் ராமராஜனுக்கு வாழ்க்கையே பிரகாசமாகிறது. அவரது திரையுலகில் உச்சபட்சம் தான் கரகாட்டக்காரன். தாறுமாறான ஓட்டம்.

OVOV
சென்னையிலேயே அந்தப் படம் அந்த அளவு ஓடியது. வசந்த் தியேட்டரில் அதன் உயரத்திற்கு ராமராஜனின் கட்அவுட் வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் தான். அவர் உதவி இயக்குனராக இருக்கும்போதே நளினி அவரைக் கவனிக்கிறார். ஹீரோவாகி 5வது படங்களில் டாப்புக்குப் போனதும் தான் நளினி அவரை விரும்பி கல்யாணம் செய்கிறார்.
நளினிக்கு கல்யாணத்துக்குப் பிறகு ராமராஜனின் மேல் சந்தேகம் வந்து விட்டது. அப்போது கவுதமி ஊருவிட்டு ஊருவந்து என சில படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். அப்போது நளினிக்கு கவுதமிக்கும், ராமராஜனுக்கும் ஏதோ ஒண்ணு இருக்கும் என சந்தேகம் வந்து விட்டது. ஊரு விட்டு ஊரு வந்து சூட்டிங் சிங்கப்பூரில் நடந்தது. ராமராஜன் அங்கு சென்றபின், அவரைக் கண்காணிக்க 3 நாள் கழித்து நளினி சிங்கப்பூர் சென்றார்.
14 ஆண்டுகள் ராமராஜன் திரை உலகில் உச்சத்தில் இருந்தார். 1999 பிற்பகுதியில் இருந்து ராமராஜனுக்கு சரிவு வரத் தொடங்கியது. மதுரையில் நடனா, நாட்டியா, நர்த்தனா தியேட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அரசியல் குழப்பங்களில் சிக்கினார். சினிமா, அரசியல் என இரண்டிலும் சரிவைத் தொடங்கினார். சீறி வரும் காளை, மேதை படங்கள் அட்டர் பிளாப். அதன்பின் கார் விபத்து ஏற்பட்டு நடக்க சிரமமானார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் படத்தில் நடித்து வருகிறார். ராமராஜன் வாங்கிப் போட்ட சொத்துகளால் ஏமாற்றப்பட்டாராம்.
இதையும் படிங்க... ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ காமெடி உருவாக காரணமே விஜயகாந்துதான்!.. என்னப்பா சொல்றீங்க!..
அதன்பிறகு நிலபுலன்கள், தியேட்டர்களை எல்லாம் விற்க வேண்டிய சூழலுக்கு ஆளானாராம். நளினியின் விவாகரத்தும் அப்போது தான் நடந்தது. முக்கால்வாசி சொத்துகள் நளினி கைக்கு போய்விட்டதாம். அதை ராமராஜன் பெரிய அளவில் பிரச்சனையாக்கவில்லை. ஆனால் இன்று வரை இருவரும் மனசுக்குள் ஆதர்சன தம்பதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நம்ம ஊரு நாயகன், பொண்ணுக்கேத்த புருஷன், ராஜா ராஜா தான், எங்க ஊரு மாப்பிள்ளை, பொங்கி வரும் காவேரி, எங்க ஊரு காவல் காரன், ஊருவிட்டு ஊருவந்து ஆகிய படங்களில் ராமராஜனுடன் கவுதமி இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.