சீரியல் மாதிரியே படத்திலேயும் இவருக்கு பதில் இவர்ன்னு போட்டு வேற நடிகரை நடிக்க வச்சிருக்காங்கப்பா… என்ன படம் தெரியுமா?
வழக்கமாக சீரீயல்களில் ஒரு நடிகரால் நடிக்க முடியவில்லை என்றால் அவருக்கு பதில் அந்த கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து “இவருக்கு பதில் இனி இவர்” என்று அறிவிப்பார்கள். ஆனால் ஒரு திரைப்படத்தில் இவ்வாறு ஒரு நடிகையை மாற்றியிருக்கிறார்கள். அது என்ன படம்? ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கதாநாயகியின் துர்மரணம்
1993 ஆம் ஆண்டு பிரசாந்த், திவ்யா பாரதி ஆகியோரின் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் “தொளி முத்து”. இத்திரைப்படம் தமிழில் ‘இளம் நெஞ்சே வா” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவதற்குள்ளேயே இத்திரைப்படத்தின் கதாநாயகியான திவ்யா பாரதி, தனது சொந்த ஊரான பம்பாயில் தான் வசித்து வந்த அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். ஆதலால் அத்திரைப்படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க திவ்யா பாரதியின் உடலமைப்பை போலவே இருக்கும் ஒரு நடிகையை தேர்ந்தெடுக்க நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அவ்வாறுதான் நடிகை ரம்பாவை, திவ்யா பாரதிக்கு மாற்றாக நடிக்க வைத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் திவ்யா பாரதி நடித்திருப்பார். மீதமுள்ள காட்சிகளில் திவ்யா பாரதியின் கதாப்பாத்திரத்தில் ரம்பா நடித்திருப்பார். இவ்வாறு சீரீயலை போல திரைப்படத்திலும் நடிகையை மாற்றி படமாக்கியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இசையை பத்தி என்ன தெரியும்?-பத்திரிக்கையாளரை கண்டபடி கேட்ட இளையராஜா… அப்போவே அப்படித்தான் போல!