ராம்கி விளம்பரத்துக்காக பண்ணப் போய் எனக்கு வினையா முடிஞ்சு! சத்யராஜின் வெறுப்பை சம்பாதிச்ச செல்வமணி

by Rohini |
ramki
X

ramki

மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. அதனால் விஜயகாந்துடன் பழக அவருக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்தது. அப்படி வந்த வாய்ப்புதான் விஜயகாந்த் மற்றும் சரத்குமாரை வைத்து அவர் எடுத்த புலன்விசாரணை திரைப்படம். முதல் படத்திலேயே அனைவரின் அபிமானத்தை பெற்றார் செல்வமணி. முதல் படமாக இருந்தாலும் எதிலும் காம்ப்ரமைஸ் ஆகாத இயக்குனராகத்தான் இருந்திருக்கிறார்.

இதன் காரணமாகவே விஜயகாந்துக்கும் செல்வமணிக்கும் இடையே அடிக்கடி சண்டை வருமாம். இருந்தாலும் அதை உடனடியாக சரிசெய்து விட்டு மேலும் அவருடன் இணைந்து படம் பண்ண போய்விடுவாராம் செல்வமணி. ஆனால் இந்த ஒரு இணக்கம் மற்ற நடிகர்களுடன் வந்ததில்லை என ஒரு பேட்டியில் செல்வமணி கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் விஜயகாந்த் தவிற மற்ற எந்த முன்னணி நடிகர்களை வைத்தும் அவர் படம் எடுத்ததே இல்லை.

அதுக்கு காரணம் இதுதான் என செல்வமணி கூறினார். பெரிய நடிகர்களுடன் படம் பண்ண வேண்டுமென்றால் அவர்களிடம் நான் சரணடைய வேண்டும். அதனாலேயே என்னால் படம் அவர்களுடன் இணைந்து படம் பண்ணமுடியவில்லை என்று கூறினார்.

ஆனால் சத்யராஜுடன் இணைந்து பணியாற்ற தொடர்ந்து மூன்று முறை வாய்ப்பு வந்தும் அவருடன் சேர்ந்து படம் பண்ண முடியவில்லை. அதற்கான காரணத்தையும் செல்வமணி கூறினார். மூன்றாவது முறையாக போலீஸ் கமிஷனர் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்க நினைத்தாராம் செல்வமணி. அதில் சத்யராஜ்தான் லீடு ரோலில் நடிக்க இருந்தாராம்.

அதே சமயம் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ராம்கியும் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் சத்யராஜை பொறுத்தவரைக்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் வேண்டாம் என சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ராம்கியின் ரோல் சின்ன கேரக்டர்தான் என சொல்லி சத்யராஜை சம்மதிக்க வைத்திருக்கிறார் செல்வமணி. இதை ராம்கியிடமும் சொல்லியிருக்கிறார் செல்வமணி.

அடுத்த இரண்டாவது நாளான திங்கட் கிழமை சூட்டிங் போக இருந்த நிலையில் ராம்கி தந்தி பாண்டியனிடம் ஒரு தொகையை கொடுத்து சத்யராஜ் - ராம்கி இணைந்து நடிக்கும் செல்வமணியின் போலீஸ் கமிஷனர் என பெரிய போஸ்டரையே ஒட்ட வைத்திருக்கிறார். இதை பார்த்ததும் சத்யராஜ் செம டென்ஷன் ஆனாராம். இதனால்தான் அந்தப் படமும் என்னை விட்டு போனது என செல்வமணி ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story