80களில் கமல், ரஜினி காலகட்டத்திலேயே ராம்கி தனக்கென தனி பாணியை வகுத்து வெற்றி கொடி நாட்டினார். சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற படத்தின் மூலம் அறிமகமானார். முதல் படத்திலேயே யதார்த்தமான கதாநாயகன் என்று முத்திரை பதித்தார்.
ராம்கியின் யதார்த்த நடிப்பு, வெள்ளந்தி சிரிப்பு கண்டு இவரைத் தென்னிந்தியாவின் அனில்கபூர் என்று அழைத்தனர். சினிமா ஆசையே இல்லாதவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு எப்படி வந்தது என்று பார்க்கலாம். மென்மையான காதல், குடும்பக்கதைகளையேத் தேர்ந்து எடுத்து நடித்தவர் ராம்கி.
சிலம்பம், டேக்வாண்டோ போன்ற பயிற்சிகளில் தேர்ந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பாரதிராஜாவின் படங்களைப் பார்த்ததும் அவருக்கு சினிமா ஆர்வம் வந்தது.
இதையும் படிங்க… 14 வருட சபதம்!.. அடிவாங்கியே ஆலமரமாக வளர்ந்த செந்தில்!.. யாருக்கும் தெரியாத மறுபக்கம்!..
சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த போது ஆபாவாணன், அருண்பாண்டியன், அரவிந்த் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. ஆபாவாணன் ராம்கியிடம் நான் இயக்கும் முதல் படத்தில் நீ தான் ஹீரோ என்று சொல்லி இருந்தாராம். ஆனால் அவரது முதல் படமான ஊமை விழிகள், உழவன் மகன் படங்களில் ராம்கியை நடிக்க வைக்க முடியாமல் போனது.
அதற்கு மிக முக்கிய காரணம் திரைப்படக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம். அதனால் தான் விஜயகாந்த், கார்த்திக், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்தாராம். இந்தப் படத்தில் தொழில்நுட்ப உதவிகளை செய்துள்ளார் ராம்கி. கடைசி சண்டைக் காட்சியில் கார்த்திக்குக்கு ராம்கி டூப் போட்டாராம்.

சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் பிரபுவுடன் சேர்ந்து 2ம் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்ததால் ஆபாவாணனின் 2வது படமான உழவன் மகன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். முதல் படத்திலேயே அறிமுக ஹீரோ போல இல்லாமல் செம மாஸான நடிப்பைக் காட்டினார் ராம்கி. நிரோஷாவைக் காதலித்து திருமணம் செய்தார். செந்தூரப்பூவே படத்தில் மோதலில் ஆரம்பித்தது காதலில் முடிந்ததாம்.
நிரோஷா வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு வரவே ராம்கியுடன் ஜோடி சேர விடாமல் தடுத்தனராம். இரவில் யாருக்கும் தெரியாமல் போனில் ராம்கியுடன் நிரோஷா பேசுவாராம். இதைத் தெரிந்து கொண்ட நிரோஷாவின் அண்ணன் அவரை பெல்டால் அடித்தாராம். மருதுபாண்டி படத்தில் லிப்கிஸ் நடிக்க வேண்டியிருந்ததால் நிரோஷா தனது வீட்டார் யாரும் இல்லாததால் தைரியமாக நடித்தாராம்.
அதன்பிறகு வீட்டார் பார்த்தால் என்னாவது என்ற பயத்தில் அந்தக் காட்சியை எடுத்துவிடச் சொன்னாராம். 1996ல் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. கடைசியில் இரு குடும்பத்தாருக்கும் பிரச்சனை. திருமணம் நின்றது. நிரோஷாவை இலங்கையில் உள்ள வீட்டில் அடைத்து வைத்தார்களாம். அதே நேரம் யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு வந்து விட்டாராம் நிரோஷா. அதன்பிறகு 1998ல் இருவரும் எந்த பிரச்சனைக்கும் இடமின்றி திருமணம் செய்து கொண்டார்களாம்.
