தென்னிந்திய சினிமாவிலேயே முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மிக சிறிய வயதிலேயே சினிமாவிற்குள் என்ரி ஆனார். ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த போதே குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றார்.
இவருக்கென்று ஏராளமான ஆடியன்ஸ்கள் உருவானார்கள். டாப் ஹீரோக்களுடன் நடித்து நல்ல ஒரு வரவேற்பைபெற்றார். சமீபகாலமாக சிறந்த துணை கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் என மிகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : எம்ஜிஆருக்கு பிறகு அந்த சாதனையை முறியடித்த சிம்பு! என்னப்பா சொல்றீங்க? நம்ப முடியலயே
இந்த நிலையில் ரஜினியுடன் 23 வருடம் கழித்து மீண்டும் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எப்பொழுது மீண்டும் அந்த காம்போவை பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஜெய்லர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் படையப்பா படத்தில் ஏண்டா வில்லியாக நடித்தோம் என முதலில் வேதனை பட்டாராம்.
ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பால் நினைத்தது தவறு என புரிந்து கொண்டாராம். அதே போல் பாகுபாலி படத்தில் நடிப்பதற்கும் ஏராளமான கண்டீசன்கள் போட்டாராம். ஆனால் அந்தப் படமும் தனக்கு ஒரு உயரிய அந்தஸ்தை பெற்று கொடுத்தது.
இதையும் படிங்க : கமல், விக்ரம் பாணியை ஃபாலோ பண்ணும் விஜய் சேதுபதி.. இனிமே அப்படி செய்ய மாட்டாராம்..
இதெல்லாம் சொல்லி முடித்த ரம்யா கிருஷ்ணன் அந்தப் படங்களில் நடிக்கும் போதெல்லாம் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு சிரித்தார். எப்பவுமே ரம்யா கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறப்பான இடம் தான்.
எல்லாம் அந்த நீலாம்பரி மற்றும் ராஜமாதா போன்ற கதாபாத்திரங்கள் கொடுத்த பெருமைதான் இன்னும் சினிமாவில் அவரை நிற்க வைக்கின்றது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…