Connect with us
simbu

Cinema News

எம்ஜிஆருக்கு பிறகு அந்த சாதனையை முறியடித்த சிம்பு! என்னப்பா சொல்றீங்க? நம்ப முடியலயே

தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த நடிகராக வலம் வருபவர் நடிகரும் புரட்சித்தலைவருமான எம்ஜிஆர். பின் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் நினைத்ததை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கையில் எடுத்து வெற்றியும் கண்டார். இப்படி பல செயல்களை மிகத்துணிச்சலாக செய்து சாதனை படைத்திருக்கிறார்.

எம்ஜிஆர் முப்பரிமாணங்களில் வேலைகள் செய்து உருவாக்கிய படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக , நடிகராக இருந்து அந்தப் படத்தை எடுத்தார். வெளிநாடுகளில் உள்ளதை போல் செட் அமைத்து  படம் எடுப்பது என்பது எளிது. ஆனால் அதையே படங்களில் சொல்லும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று படத்தை என்பது அதுவும் அந்தக் காலத்தில் எடுப்பது அவ்ளவு எளிதான விஷயம் இல்லை.

இதையும் படிங்க : எம்ஜிஆரின் படங்களா? ஐய்யோ வேணாம் – பிச்சிக்கிட்டு ஓடிய ஆருர்தாஸ்! ஏன்னு தெரியுமா?

ஆனால் அதை மிகத் துணிச்சலாக செய்தார். இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் இல்லாமல் தென் கிழக்கு நாடுகளான ஜப்பான், சிங்கப்பூர், டோக்கியோ போன்ற பல நாடுகளுக்கு அத்தனை கலைஞர்களையும் அழைத்துச் சென்று அந்தப் படிப்பை நடித்தார். முதன் முதலில் வெளி நாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்திய பெருமை எம்ஜிஆரையே சேரும்.

இந்த அனுபவத்தை அவர் புத்தகமாக எழுதியிருக்கிறாராம். திரைக்கடலோடு திரைப்படத்தையும் எடுத்தோம் என்ற தலைப்பில் தொடராக தன் அனுபவத்தை ஒரு நாளிதழில் எழுதினாராம். இதனால் வளரும் இளம் தலைமுறையினருக்கும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கிலேயே எழுதியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆருடன் வந்த அத்தனை கலைஞர்களின் வாழ்க்கையும் எம்ஜிஆரின்  கையில்தான் இருந்தது. அது மட்டும்தாம் எம்ஜிஆருக்கு மனதில் இருந்ததாம். எப்படி அழைத்து வந்தோமோ அதே போல் பத்திரமாக இந்தியாவில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஓடிக் கொண்டிருந்ததாம்.

இதையும் படிங்க : நீங்க என்ன சொல்றது.. நான் சொல்றேன்! ‘ஜெய்லர்’ நல்ல படம்னு சொல்லமுடியாது – பிரபல தயாரிப்பாளர் கருத்து

இப்படி உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவானதில் பல சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு எம்ஜிஆரின் மகத்தான சாதனையை செய்திருக்கிறார்.

அதாவது முதன் முறையாக ஜப்பானில் ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்றால் அது உலகம் சுற்றும் வாலிபன் தான். அதற்கு அடுத்தபடியாக வேறெந்த படமும் அங்கு நடக்கவில்லையாம். ஆனால் சிம்புவின்  ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் தான் நடைபெற்றதாம். அதன் படி எம்ஜிஆருக்கு அடுத்து சிம்புவின் படம்தான் ஜப்பானில் நடந்த இரண்டாவது படமாகும்.

ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. நெல்சன் இயக்கத்தில் 30 நாள்கள் சூட் ஜப்பானில் தான் நடந்ததாம். பொருளாதார சிக்கல் காரணமாகத்தான் அந்தப் படம் மேலும் தொடரவில்லையாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top