நடிகையை துரத்தி துரத்தி காதலித்த ரம்யா கிருஷ்ணனின் கணவர்!.. ஆனா நடந்ததே வேற!..
Ramyakrishnan: சினிமாவில் நடப்பதை விட பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும் ரகளைகள் ஏராளம். அப்படி தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் வாழ்க்கையில் தன்னுடைய சக நடிகையால் வீச இருந்த புயல் எதேர்ச்சையாக தப்பித்த நிகழ்வை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழில் வெள்ளை மனசு திரைப்படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதை தொடர்ந்து தமிழில் அவருக்கு முதலில் சப்போர்ட் ரோல் தான் அதிகமாக வந்தது. ரஜினிகாந்துடன் படிக்காதவன், கமல்ஹாசனுடன் பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஒரே நேரத்தில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா மலையாள படங்களிலும் கொடி கட்டி பறந்தார்.
இதையும் படிங்க: கேப்டனாக மாறிய வினுசக்கரவர்த்தி! கலாட்டா செய்த ரசிகர்களை என்ன செய்தார் தெரியுமா?
இவர் நல்ல உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிருஷ்ண வம்சி தெலுங்கில் பிரபல இயக்குனர். இரண்டு தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தவர்.
இவர்கள் திருமணம் முடிந்து சில வருடம் கழித்து நடிகை பானுபிரியா தன்னுடைய திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு நடிக்க வந்து இருக்கிறார். அவரை பார்த்த கிருஷ்ண வம்சிக்கு காதல் பிறந்ததாம். அவரை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள தொடர்ந்து தொந்தரவு செய்தாராம்.
இதையும் படிங்க: என்னங்க ஹரி சினிமாட்டிக் யூனிவர்ஸா… சிங்கம் படத்தில் இது நடக்க இருந்தது… ஆனா ஜஸ்ட்டு மிஸ்ஸு..
இந்த விஷயத்தினை தற்போதைய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார். சும்மா இருக்கவங்க லைஃபில் ஏன் இப்படி கொளுத்தி போடுறீங்க என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ரொம்ப தைரியமான ரம்யா கிருஷ்ணன் இதை எப்படி எதிர்கொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.