More
Categories: Cinema News latest news

அப்போ பகத் ஃபாசில் இல்லையா?.. பாகுபலி நடிகரை களமிறக்கிய தலைவர் 170 டீம்.. யாருன்னு பாருங்க!..

தலைவர் 170 திரைப்படத்தின் தாறுமாறான அப்டேட்கள் தினமும் வெளியாகி வருகின்றன. ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளது.

கடந்த சில நாட்களாகவே படத்தின் காஸ்ட் அப்டேட் குறித்த அறிவிப்புகளை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. விடாமுயற்சி படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்னை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெட் வேகத்தில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தலைவர் 170 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து விட்டார் ரஜினிகாந்த்.

Advertising
Advertising

இதையும் படிங்க: வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என மூன்று வலிமையான நடிகைகள் இணைந்துள்ள அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அனிருத்தையே இசையமைப்பாளராக மாற்றி உள்ளனர்.

பகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தலைவர் 170 படத்தில் இணைந்திருப்பதாக அதிரடி அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: துண்டை கட்டிட்டு நடிச்சிட்டு டிரெஸ்ஸிங் பத்தி பேசலாமா?.. விசித்ராவை விளாசிய பிக் பாஸ் பிரபலம்!..

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தில் பல்வாள் தேவனாக நடித்த ராணா டகுபதி தலைவர் 170 படத்தில் இணைந்துள்ள நிலையில், மலையாள நடிகை மஞ்சு வாரியரும் உள்ளார். ஜெயிலர் படத்தை போலவே தலைவர் 170 படத்திலும் பான் இந்தியா நடிகர்கள் இடம்பெற்றால் இந்த படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை படமாக மாறும் என தெரிகிறது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இந்த படம் கருத்துள்ள பிரம்மாண்ட படமாக உருவாகும் என்றும் கூறியிருந்தார். ஆனால், காவிரி விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் சொல்லாமல் கிளம்பி விட்டார்.

Published by
Saranya M