ஓவரா எதிர்பார்த்து ஒன்னும் இல்லன்னா செஞ்சிருவாங்க!.. லியோ பார்த்து அலார்ட் ஆன ரஞ்சித்!..
அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ரஞ்சித் எந்த மாதிரியான இயக்குனர் என ரசிகர்களுக்கு காட்டியது. அவரின் அனைத்து திரைப்படங்களிலும் அரசியலை சாடியிருப்பார்.
அரசியல் எளிய மக்களை எப்படி ஏமாற்றுகிறது. எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களின் அறியாமையை அரசியல் எப்படி தனக்காக எப்படி பயன்படுத்திக்கொள்கிறது என்பதை தோலுரித்து காட்டி வருகிறார். அடக்குமுறைக்கு எதிராக பொங்கும் அரசியல்தான் பா.ரஞ்சித்தின் சினிமா. இது அவரின் படம் பார்க்கும் எல்லோருக்கும் புரியும்.
இதையும் படிங்க: கோடியை மட்டும் சுருட்ட தெரியுது! எங்க நிலைமையையும் யோசிங்க நயன் – பரிதவிக்கும் படக்குழு
ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கினார். ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய சார்பேட்டா பரம்பரை படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விக்ரமை வைத்து தங்கலான் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை இது.
கர்நாடகா தங்க சுரங்கம் அருகே வசிக்கும் மக்களை வெள்ளையர்கள் எப்படி விரட்ட நினைக்கிறார்கள். விக்ரமும் அவரின் மக்களும் எப்படி அதை எதிர்த்து போராடினார்கள் என்பதுதான் கதை. இந்த படத்திற்கு துவக்கம் முதலே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதற்கு காரணம் விக்ரமின் தோற்றம்தான்.
இதையும் படிங்க: எங்களுக்கு கோமணம்… அவருக்கு மட்டும் ஷாட்ர்ட்ஸா?… இயக்குனரை வெளுத்து வாங்கிய விக்ரம்…
இப்படத்தின் டீசர் வீடியோவும் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ரஞ்சித் ‘ஒரு படத்தை மக்கள் ஓவராக எதிர்ப்பாத்து அதுக்கான தீனிய நாம போடலன்னா நம்மள வச்சி செஞ்சிருவாங்க.. தங்கலான் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதை நாங்கள் நிச்சயம் பூர்த்தி செய்வோம் என நம்புகிறேன்’ என பேசியுள்ளார்.
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு, அது பூர்த்தி செய்யப்படாமல் போகவே படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. எனவே, ரஞ்சித் இதை மனதில் வைத்துதான் இப்படி பேசியிருக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காலையில் ப்ரோபோஸ் செய்தவருடன் மாலையில் திருமணம் செய்து கொண்ட ரஜினி மகள்… அட சுவாரஸ்யமால இருக்கு..!