Entertainment News
இந்த ரேஞ்சில போனா நாங்க காலி!..ஸ்டன்னிங் லுக்கில் ராஷ்மிகா மந்தானா..
கன்னட திரைப்படத்தில் நடிக்க துவங்கி தெலுங்கு, தமிழ் என நடித்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளவர் ராஷ்மிகா மந்தனா.
கீதாகோவிந்தம், புஷ்பா என அவர் நடித்த திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. அதுவும் புஷ்பா திரைப்படம் பேன் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களிடம் ராஷ்மிகாவை நெருக்கமாக்கியுள்ளது.
அப்படத்தில் சாமி பாடலுக்கு அவர் போட்ட நடனம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது. தற்போது அமிதாப்பச்சனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா.
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டை படத்திற்காக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.