தனுஷை டீலில் விட்ட ராஷ்மிகா மந்தனா!.. அதனாலதான் இப்படி ஆகிப்போச்சோம்!..
கேப்டன் மில்லர் படத்துக்காக நீண்ட தாடி,முடி வளர்த்திருந்த நடிகர் தனுஷ் படத்தை முடித்த அடுத்த கையோடு திருப்பதி போய் முகம், தலை என எல்லாவற்றையும் வழித்துவிட்டு தனது 50வது படத்தை துவங்கினார். இப்படத்தை அவரே தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் என பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை வேகமாக முடித்தவிட்ட தனுஷ் உடனே ஒரு புதிய படத்தை அறிவித்தார். அதுதான் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற திரைப்படம். இப்படத்தில் தனது அக்காவின் மகனை ஹீரோவாக களம் இறக்கியிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் கதையை 4 வருடங்களுக்கு முன்பே தனுஷ் எழுதிவிட்டார்.
இதையும் படிங்க: அட்லியியை அலேக்கா தூக்கிய சன் பிக்சர்ஸ்!.. போட்டி போடும் இரண்டு ஹீரோக்கள்!…
இப்படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குவதாக இருந்தது. ஆனால், அப்போது ‘வேலை இல்லா பட்டதாரி 2’ புராஜெக்ட் டேப் ஆப் ஆனதால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இப்படத்தை இயக்கி கிட்டத்தட்ட 75 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டாராம்.
இப்போது டி-50 முடித்த நிலையில் இப்படத்தை தனுஷ் கையில் எடுத்துள்ளார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், லியோ படத்தில் விஜயின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் என பலரும் நடித்து வருகின்றனர். உண்மையில், டி-50 படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார்.
இந்த படக்குழு ஒரு வருடத்திற்கும் மேல் தனுஷுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். டி-50 படத்தை முடித்த கையோ அப்படத்தில் நடிக்கவிருந்தார் தனுஷ். ஆனால், தெலுங்கு, ஹிந்தி என மாறி மாறி நடித்துக்கொண்டிருக்கும் ராஷ்மிகா கையிலோ இப்படத்தில் நடிக்க நாட்கள் இல்லை.
எனவே, இப்படம் தள்ளி போய்விட்டது. எனவேதான், தனுஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை கையில் எடுத்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஓகேவா இருந்தா புருஷனை வச்சிப்போம்.. இல்ல துரத்தி விட்ருவோம்.. பகீர் காரணம் சொன்ன கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் நாயகி!