இதை ஓபனாவே சொல்லிடலாமே!.. துருக்கியில் ரகசியமாக ராஷ்மிகா யாருடன் டூர் அடிக்கிறாரு பாருங்க!..

நடிகை ராஷ்மிகா மந்தனா துருக்கியில் ஜாலி டூர் அடித்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் இன்னொரு பிரபல நடிகரும் துருக்கியில் இருக்கும் போட்டோக்களை வெளியிட மீண்டும் ரசிகர்கள் இருவரும் ஒன்றாகத்தான் காதல் சுற்றுலா செய்து வருகின்றனர் என கன்ஃபார்ம் பண்ணி உள்ளனர்.

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா முதல் படத்திலேயே கூட நடித்த நடிகருடன் காதல் வயப்பட்டு ரக்‌ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தமே முடிந்த நிலையில், அவரை திருமணம் செய்துக் கொள்வார் என பார்த்தால், அவர் போட்ட சில கண்டிஷன்கள் இவருக்கு பிடிக்காமல் போக அங்கிருந்து அப்படியே டோலிவுட் பக்கம் ஒதுங்கினார்.

இதையும் படிங்க: நம்புங்க பாஸ் நான் அன்பான இயக்குநர் தான்!.. விஜய் ரசிகர்களிடம் திடீரென மன்னிப்புக்கேட்ட நயன்தாரா கணவர்!..

கன்னட படம் கொடுக்காத வெற்றியை ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டா நடித்த கீத கோவிந்தம் படம் கொடுக்க தேசிய அளவில் அவருக்கு புகழ் வெளிச்சம் கிடைத்து நேஷ்னல் கிரஷ் ஆனார்.

தொடர்ந்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட சில படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்லை!.. 100 லியோ அப்டேட் கொடுத்துருக்காரு லோகேஷ் கனகராஜ்.. இது ரத்னகுமார் உருட்டு!..

அதற்கு அனைத்து வகையிலும் வாய்ப்பு கொடுக்கும் விதமாக மாலத்தீவு சென்றாலும், இருவரும் ஒரே இடத்தில் இருக்கும் போட்டோக்கள் வெளியாகின்றன. மற்ற வதந்திகளுக்கெல்லாம் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்து வரும் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா பற்றிய பேச்சுக்கு மட்டும் மறுப்பு தெரிவிக்காமல் உள்ளார்.

இந்நிலையில், துருக்கியில் தற்போது ராஷ்மிகா டூர் அடித்து வரும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே போல விஜய் தேவரகொண்டாவும் குஷி படத்தின் ரிலீஸுக்கு பிறகு அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் தற்போது துருக்கியில் முகாமிட்டு இருக்கும் போட்டோக்களை அவரும் ஷேர் செய்துள்ளார்.

இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் ஜோடியாக காதல் டூர் அடித்து வருகிறார்களா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி கன்ஃபார்ம் செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக இருவரும் காதலிப்பதாக அறிவிக்கவே இல்லை.

 

Related Articles

Next Story