அம்மாவுடன் பேசக்கூடிய விஷயமா அதெல்லாம்?.. ராஷ்மிகா மந்தனா சொன்ன விஷயத்தை கேட்டீங்களா!..

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

கன்னட தயாரிப்பாளரும் நடிகருமான ரக்‌ஷித் ஷெட்டியுடன் ஆரம்பத்திலேயே அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ரக்‌ஷித் ஷெட்டியை விட்டு திடீரென விலகி விட்டார்.

இதையும் படிங்க: அதுக்கு மொத்தமா நோ சொன்ன விஜய்!.. தளபதி தரிசனமே அப்போ இனிமேல் கிடையாதா?.. என்ன இப்படி ஆகிடுச்சு!..

கன்னடத்தில் இருந்தே அப்படியே விலகி விட்ட நிலையில், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடிக்க அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், நேஷ்னல் கிரஷ்ஷாகவே மாறிவிட்டார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வந்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி மற்றும் விஜய்யுடன் இணைந்து நடித்தார். தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் என தனது லெவலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டு போன நிலையிலும், விஜய் தேவரகொண்டாவுடன் காதலித்து வருகிறார் என்றும் அவரை ரகசியமாக திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது அம்மாவுடன் கிசுகிசு பேசுகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ‘ரோஜா’வுக்கு முன்பே ஒரு முழு படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!. அட ஹீரோ அவரா?!..

மீண்டும் வீட்டுக்கு சென்று அம்மாவுடன் ராஷ்மிகா இருப்பதை பார்த்த ரசிகர்கள் அந்த கிசு கிசு என்ன என்றும் சீக்கிரமே ராஷ்மிகாவுக்கு டும் டும் டும்மா என்று ரசிகர்கள் வேற கிசுகிசுவை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பயங்கர ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகா இந்த ஆண்டு அனிமல் படத்தின் வெற்றிக்காக வெயிட் பண்ணி வருகிறார். அடுத்த ஆண்டு புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

 

Related Articles

Next Story