Connect with us

Cinema History

இரவில் தான் நடிக்க வருவேன்… வித்தியாச நிபந்தனையால் திகைக்க வைத்த எம்.ஆர்.ராதா…

தமிழ் சினிமாவின் நடிப்பு நாயகன் எம்.ஆர்.ராதா சினிமாவில் நடிக்க வரும்போது போட்ட கண்டிஷன்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எம்.ஆர்.ராதாவின் முதல் படம் ராஜசேகரன். இப்படத்தின் தோல்வியால் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தும் அவர் கலங்கவில்லை. தன்னுடையே நாடக துறைக்கே திரும்பினார். தொடர்ந்து அவர் போட்ட நாடகம் தான் ரத்தக் கண்ணீர். அதில் குஷ்டரோகியாக அவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கான மேக்கப் அப்பை கூட அவரே போட்டு கொள்வாராம். அதுவும் தத்ரூபமாக இருக்குமாம்.


தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வெற்றி கண்ட நாடகங்களே படமாகியது. அப்படி பெரும் வரவேற்பை பெற்ற ராதாவின் ரத்தக் கண்ணீரை நாடகத்தை படமாக்க பலரும் ஆசைப்பட்டனர். இருந்து எம்.ஆர்.ராதா உடனடியாக ஓகே சொல்லும் ரகம் கிடையாது என்பதால் யாரும் அவரிடம் பேசவில்லையாம். பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் எம்.ஆர்.ராதாவிடம் ரத்தக்கண்ணீர் படத்தினை தயாரிக்க மட்டுமன்றி மீண்டும் அவரை நடிக்கணும் என்று அனுமதி கேட்டார்.

இதையும் படிங்க: சம்பள பாக்கியை வாங்க எம்.ஆர்.ராதா செய்த வேலை!…அட இது வேற லெவல்!…

சற்று தயங்கிய எம்.ஆர்.ராதா, சினிமா சகவாசம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தும், நீங்கள் கேட்பதற்காக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எனக்கு இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் இருக்கிறது. இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் நடிக்கிறேன் என்றார். அதற்கு பெருமாள் முதலியாரும் ஒப்புக்கொண்டாராம். அது என்னவென்றால், சினிமாவிற்காக என்னால் நாடகத்தை விடமுடியாது. தினமும் எனது நாடகத்தை நடத்துவேன். அதனால் என்னால் இரவில் தான் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும். நான் நாடகத்தில் நடித்து பழக்கப்பட்டவன். என்னால் கேமராவிற்கு ஏற்றப்போல திரும்ப முடியாது. நீங்கள் தான் எனக்கு ஏற்றப்போல கேம்ராவை திருப்பிக்கொள்ள வேண்டும்.

எம்.ஆர்.ராதா

மேலும், அந்த சமயத்தில் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார் கே.பி.சுந்தராம்பாள். அவரை விட தனக்கு 25 ஆயிரம் அதிகமாக போட்டு 1.25 லட்ச ரூபாயை சம்பளமாக கேட்டார். இத்தனை நிபந்தனைகளும் ஓகே செய்ததும் தான் நடித்தார். ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்ததும் இரண்டு பெரிய கேரியரில் சாப்பாடு எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு போவாராம். முதலில் அவரிடம் பயந்து ஒதுங்கிய படக்குழு, அவரின் சாப்பாட்டாலே அவரிடம் நெருங்கினார்களாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top