
Cinema News
ரத்னகுமார் செஞ்ச வேலையில் மொத்தமும் காலி!.. கோபத்தில் லோகேஷ் என்ன பண்ணார் தெரியுமா?!..
சினிமாவில் இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ பொழப்பை ஓட்ட வேண்டுமெனில் நடிகர்களின் தயவு வேண்டும். அவர்கள் கால்ஷீட் கொடுக்கவில்லை எனில் படமெடுக்க முடியாது. எனவே, சுலபத்தில் அவர்கள் நடிகர்களிடம், அதுவும் விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களை பகைத்து கொள்ள மாட்டார்கள்.
ஒரு நடிகரை பற்றி தவறாக எங்கேயும் பேசவும் மாட்டார்கள். ஏனெனில், சினிமாவில் எங்கே காது இருக்கும் என சொல்லவே முடியாது. போய் போட்டு கொடுத்து விடுவார்கள் என்பதே அதற்கு காரணம். ஆனால், சில இயக்குனர்கள் தெரியாமல் வாயை விட்டு வாழ்க்கையை கெடுத்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!
லோகேஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ரத்ன குமார். மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்தவர். அதன்பின் ஆடை, குளு குளு ஆகிய படங்களை இயக்கியிருந்தார். மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் வேலை செய்தார். ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா – கதை விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது.
அதன்பின், லியோ ஆடியோ விழாவில் விஜய் இதற்கு பதிலடி கொடுப்பார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த விழாவில் பேசிய ரத்னகுமார் விஜயையும், விஜய் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துவதற்காக ‘கழுகு எவ்ளோ மேல பறந்தாலும் கீழ வந்துதான் ஆகணும்’ என பேச லோகேஷே அதிர்ந்து போனார். விஜயும் அதற்கு கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது. ரத்னகுமார் பேசியது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த டிவிட்டரில் அவரை வச்சு செய்தனர்.
இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…
ஒருபக்கம், இது லோகேஷுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அடுத்து அவர் ரஜினியை இயக்க போகிறார். அந்த படத்திலும் ரத்னகுமார் வேலை செய்வதாக இருந்தது. ஆனால், ரஜினியை பற்றி இப்படி பேசிவிட்டதால் இப்போது அவர் அந்த படத்தில் இல்லை. ரத்னகுமார் அப்படி பேசியதில் அப்செட் ஆன லோகேஷ் அவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
அதில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம். ஒருகட்டத்தில் கடுப்பான லோகேஷ் தற்போது அவருடன் இருக்கும் உதவி இயக்குனர்கள் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டாராம். எனவே, அவரின் அடுத்த படத்தில் புதிய உதவி இயக்குனர்கள் வேலை செய்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. இப்போது மித்ரன் இயக்கவுள்ள சர்தா 2 படம் தொடர்பான வேலையை செய்து வருகிறார் ரத்ன குமார்.
இதெல்லாம் தேவையா பாஸ்!..