லைஃப்பை தொலைச்சிட்டியே ரத்னா!.. கழுகை பகைச்ச காக்காவுக்கே அந்த அடின்னா.. காக்கா குஞ்சுக்கு?..

Published on: November 6, 2023
---Advertisement---

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்யை பாராட்டி பேசிக் கொண்டே இருந்த ரத்னகுமார் கடைசியில் அவரை சந்தோஷத்தில் ஆழ்த்த எவ்வளவு உயர பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியது பரபரப்பை பற்ற வைத்தது.

லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ள நிலையில், அவரது நண்பராக பெரும் இக்கட்டான சூழலை ரத்னகுமார் உருவாக்கி விட்டார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பணியாற்ற உன்னுடைய உதவி இயக்குநர்களை எல்லாம் வைத்துக் கொள். அந்த ரத்னா மட்டும் வேண்டாம் என ஒதுக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா!.. மறுபடியும் வசமா சிக்கிய சிவகார்த்திகேயன்!.. இவ்ளோ சீப்பான ஆளா அவர்?..

ஷூட்டிங் நடக்கும் போது கூட ஒரு நட்பு ரீதியாக கூட லோகேஷ் கனகராஜை சந்திக்க முடியாத சூழல் ரத்னகுமாருக்கு உருவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்க்கு எதிராகவே ரஜினி ரசிகர்கள் இப்படி அடித்து நொறுக்கி லியோ படத்தை காலி செய்த நிலையில், ஏற்கனவே குலு குலு போன்ற சொதப்பல் படத்தை கொடுத்துள்ள ரத்னகுமாரை எல்லாம் இனிமேல் சினிமாவில் வளர விடுவார்களா? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

இதையும் படிங்க:  என்னது ப்ரோவா!.. கீர்த்தி சுரேஷ் எப்போ பையனா மாறினாரு.. இப்படி ஃபயர் விடுறாங்களே மாளவிகா மோகனன்!..

நடிகர் ரஜினிகாந்திடம் இதற்காக ரத்னகுமார் மன்னிப்பு கேட்க உள்ளதாகவும், லோகேஷ் கனகராஜே தனது எதிர்ப்பை ரத்னாவிடம் அந்த வெற்றி விழா முடிந்ததும் தெரிவித்ததாக கூறுகின்றனர்.

ரத்னகுமார் தலைவர் 171 படத்தில் பணியாற்றாமல் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார். ஆனால், அந்த படத்தின் அப்டேட்கள் வரும் போது அவருக்கு பெரிய அடி கன்ஃபார்ம் என ரஜினி ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.