
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் ரவி. ஜெயம் ஹிட் என்பதால் ஜெயம் ரவியாக மாறினார். அதன்பின் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லையென்றாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து வருகிறது. அதேநேரம் தனி ஒருவன், கோமாளி போன்ற படங்கள் அவருக்கு நல்ல வசூலை கொடுத்தது..
நடிகராக மட்டுமே இருந்த ஜெயம் ரவி தற்போது இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமாவில் அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ரவி மோகன் புரடெக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.. அதில் ஒன்றை யோகி பாபுவை வைத்து ஜெயம் ரவியே இயக்கி வருகிறார்..
ஒருபக்கம், சினிமாவில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ஜெயம் ரவி சுதா கொங்கராஅ இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வாதி ஆகியோர் நடித்த பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு பலரும் பாராட்டினாரக்ள். இந்நிலையில்தான் லோகேஷ் கனகராஜ் கதை எழுதி, தயாரித்து, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வரும் பென்ஸ்(Benz) படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்,,
வில்லனாக நடித்தால் அதிக சம்பளம் கேட்கலாம். ஜெயம் ரவி தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பதால் நிறைய பணம் தேவைப்படுகிறது. எனவேதான், வில்லன் என்றாலும் ஓகே என்கிற மனநிலைக்கு அவர் வந்துவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது..