Jananayagan: மனசு உடைஞ்சி போச்சி விஜய் அண்ணா!… பராசக்தி நடிகர் சப்போர்ட்!..

Published on: January 8, 2026
jayam
---Advertisement---

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் நாளை ரிலீஸாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சினை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்‌ஷன். ஏற்கனவே இதை பற்றி முதலிலேயே விஜய் கேவிஎன் புரடக்‌ஷனிடம் பேசியிருந்தார். என் படத்திற்கு பிரச்சினை வருமே? உங்களுக்கு பரவாயில்லையா என்று கேட்டுத்தான் இந்தப் படத்திற்குள்ளேயே விஜய் வந்திருக்கிறார்.

அதற்கு கேவிஎன் நிறுவனம் என்ன நடந்தாலும் ஓகே என்று சொல்லித்தான் ஜன நாயகன் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது. விஜய் சொன்ன மாதிரியே படத்தை ரீலீஸ் செய்யவிடாமல் எல்லா பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த மாதம் சென்சாருக்கு சென்ற படத்தை தணிக்கை அதிகாரிகள் ஆய்வு செய்த பின் சில காட்சிகளை நீக்க சொல்லியிருக்கிறார்கள்.

Also Read

அவர்கள் சொன்னதை போல் அந்த காட்சிகளை நீக்கி மீண்டும் சென்சாருக்கு படக்குழு அனுப்ப இதுவரை சென்சார் சான்றிதழை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் பட நிறுவனம் சென்சார் சான்றிதழை பெற்றுத்தரக் கோரி நீதிமன்றத்தை நாடினார். அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற இந்த வழக்கை நாளை ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம். அதனால் படத்தின் ரிலீஸ் தேதியையும் பட நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது.

இதற்கிடையில் விஜயின் இந்த பிரச்சினைக்கு திரைத்துறையில் இருந்து யாருமே குரல் கொடுக்கவில்லை. எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். யாருமே இது பற்றி கேள்வி கேட்கவில்லை. கோவிட் நேரத்தில் தன்னுடைய மாஸ்டர் படத்தை ஓடிடியில் திரையிட விடாமல் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்து தயாரிப்பாளருக்கும் திரையரங்க உரிமையாளர், வினியோகஸ்தர் என அனைவருக்கும் ஒரு மறுவாழ்வு கொடுக்க காரணமாக இருந்தவர் விஜய்.

ஆனால் இன்று அவருடைய படத்திற்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது யாருமே முன்வர வில்லை என்பதுதான் மிகப்பெரிய வருத்தம். இந்த நிலையில் ரவி மோகன் தற்போது ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். மனம் உடைந்துவிட்டது விஜய் அண்ணா. உங்கள் பக்கம் இருக்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒரு தம்பியாக நானும் நிற்கிறேன். உங்களுக்கு தேதி எல்லாம் தேவை இல்லை. நீங்கள்தான் ஓப்பனிங்கே. ரிலீஸ் எந்த தேதியாக இருந்தாலும் எங்களுக்கு அதுதான் பொங்கல் என்று பதிவிட்டிருக்கிறார்,

அதுமட்டுமில்லாமல் பராசக்தி பட இயக்குனரான சுதா கொங்கராவும் ‘ நான் விஜயின் ஒரு பெரிய ரசிகை என அனைவருக்கும் தெரியும். எனக்கு விசில் அடிக்க தெரியாது. அதனால் விஜயின் படங்களை பார்க்கும் போது ஒரு மூன்று பேரை என்னுடன் அழைத்து செல்வேன். ஏனெனில் விஜயின் மாஸ் சீன்கள் வரும் போது அவர்களை விசில் அடிக்க விட்டுத்தான் நான் செலிபிரேட் செய்வேன். ஜன நாயகன் எப்போது ரிலீஸ் ஆனாதும் அதை முதல் நாள் முதல் காட்சியில் கண்டிப்பாக பார்ப்பேன்’ என சுதா கொங்கரா கூறியிருக்கிறார்.

இன்னொரு பக்கம் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபிச்சக்கரவர்த்தி ‘ஜன நாயகன் வெளியீட்டை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகப்பெரிய வெற்றிக்கான சரியான மேடையை அமைத்து வருகின்றன. தைரியமாக இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்’ என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி விஜயின் ரசிகர்களாக அறியப்படும் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய குமுறல்களை பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.