More
Categories: Cinema History Cinema News latest news

கமல் – மணிரத்னம் ‘தக் லைப்’ படத்தின் கதை இதுதானா? – ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

சமீபத்தில் மணிரத்னம், கமல் காம்போவில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் தக் லைஃப். படத்தோட டைட்டில் வீடியோ கடந்த வாரம் வெளியானது. இந்தப்படத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

ரொம்ப அல்டிமேட்டா இருக்கு. பார்க்கும்போது கமல்ஹாசன் யப்பா எப்படி இருக்காரு? இந்த வயசில… அப்படிங்கற அளவுக்கு இருக்கு.

Advertising
Advertising

பிக்பாஸ்ல பார்க்கும்போது கொஞ்சம் தளர்வா இருந்தாரு. அய்யய்யோ என்னடா இப்படி இருக்காருன்னு… யோசிச்சோம். இதுல பார்த்தீங்கன்னா அப்படி ஒரு பிரம்மாண்டமா இருக்காரு. அப்படி காமிச்சிருக்காங்க. படமும் வந்து பெரிய எதிர்பார்ப்பைக் கிரியேட் பண்ணிருக்கு.

காயல்பட்டணத்தைச் சேர்ந்த சக்திவேல் நாயக்கர். அவர் யாரு? என்னன்னு தெரில. நிஜ வாழ்க்கையை எடுக்குறாங்களா? அல்லது முழுக்க முழுக்க கற்பனையா அப்படிங்கறது எல்லாம் தெரில. அது போகப்போகத் தான் தெரியும்.

ஆனா தக் லைஃப்ங்கற அந்த தலைப்பு மட்டும் தான் கொஞ்சம் அந்தக் கேரக்டர், அந்தக் கதை களம், அந்தப் பின்னணி இதுக்கும் அந்த டைட்டிலுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு. ஆக்சுவலா நாம கூகுள்ல தேடிப்பார்க்கும்போது தக் லைஃப்ங்கறது 1800களில் வாழ்ந்த தக் கூட்டம். அவங்க வந்து வழிப்பறி கொள்ளையர்கள்.

TL1

அவங்களை வந்து பிரிட்டிஷார் எப்படி அடக்கினாங்கங்கற மாதிரி கதை போகுது. அதுல வந்து ஒருத்தன் அவனோட வாழ்க்கைல 916 கொலைகள் பண்ணிருக்கான். அவன் தான் உலகத்துலயே அதிகமான கொலை பண்ணினவன். ஒருவேளை அவரோட வாழ்க்கையை எடுக்குறாங்களான்னு தெரில. ஏன்னா ஃபுல்லா நெகடிவ் கேரக்டரா இருக்கு. அப்பாவி மக்களிடம் வழிப்பறி பண்றது தான் அவங்களோட முழுநேர தொழிலாவே இருக்கு.

அதை வந்து தலைப்பா மட்டும் எடுத்துக்கிட்டாங்களா? சக்திவேல் நாயக்கர் வாழ்க்கைன்னு ஒண்ணு தனியா இருக்கா? அதெல்லாம் எதுவுமே தெரியல. அடுத்த வருஷம்தான் இந்தப் படத்தையே ஆரம்பிக்கப் போறாங்க. 2024 பிப்ரவரில தான். இவ்வளவு சீக்கிரமா இதை அறிவிச்சி எல்லார் மத்தியிலயும் ஒரு எதிர்பார்ப்பையும் அதுக்கு நிகரான குழப்பத்தையும் ஏற்படுத்தி வச்சிருக்காங்க. பார்க்கலாம் எப்படி இருக்குன்னு.

பல பேரு நாயகன் பார்ட் 2 வான்னு கேட்குறாங்க. ஏன்னா நாயகன் படத்துல அவரோட பேரனா சக்திவேல்னு ஒரு குட்டிப்பையன் நடிச்சிருப்பாரு. அவரு தான் இந்த சக்திவேல்னு சொல்றாங்க. என்ன லாஜிக்ல தான் பேசுறாங்கன்னே தெரியல. ரொம்ப அபத்தமா இருக்கு.

டேய் எப்படிறா உலகம் 2023, 24, 26 அப்படித்தானடா போகும்? எப்படி அதெப்படி இந்தப் பக்கமா ரிவர்ஸ்ல போகும்னு தெரில. இது நடக்குறது 1800 நூற்றாண்டு. அந்த காஸ்டியும், டிரஸ்கோடு, ஆயுதம் அதெல்லாம் பார்க்கும்போது இறந்த காலத்துல கதை போகுது. இவங்க எதிர் காலத்துல ஒரு கதையை சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை அந்தக்கதையின் தொடர்ச்சி வந்தா கூட நல்லாருக்கும். இதுல வந்து லேசா இஸ்லாமிய ஜாடை இருக்கு. இதெல்லாம் கனெக்ட் பண்ணிப் பார்க்கும்போது இது என்ன மாதிரியான படமா இருக்கும்னு குழப்பம் இருந்துக்கிட்டே இருக்கு.

Published by
sankaran v

Recent Posts