மாஸ் ஹிட் படங்களில் கழட்டிவிடப்பட்ட 5 பிரபலங்கள்... இதற்கு தானா?

by Akhilan |   ( Updated:2022-09-21 07:49:35  )
மாஸ் ஹிட் படங்களில் கழட்டிவிடப்பட்ட 5 பிரபலங்கள்... இதற்கு தானா?
X

பெரும்பாலும் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது மதில் மேல் பூனை கதை தான். படம் துவங்கி வெளியாகும் வரை அதில் நடித்தவர்கள் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற நிலையில் தான் இருக்க முடியும். அப்படியும் முன்னணி பிரபலங்களுக்கே சில படங்கள் டாட்டா காட்டிய நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. முன்னணி பிரபலங்கள் பலரை தூக்கி வேறு பிரபலங்களை போட்டு படக்குழு அப்படத்தையும் ஹிட் கொடுத்திருக்கிறது.

வடிவேலு- படிக்காதவன்:

தனுஷ் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் படிக்காதவன். இப்படத்தில் தனுஷ் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதுமில்லாமல்,இரண்டாம் பகுதியில் விவேக்கின் அசால்ட் ஆறுமுகம் கேரக்டர் செம அப்ளாஸை தட்டியது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானது வடிவேலு தானாம். வடிவேலுவிற்கு வசனங்களை அவருக்கு ஏற்றப்போல மாற்றி கொள்வது வழக்கம். அந்தவகையில்,இப்படத்திலும் சில டயலாக்கை மாற்றினாராம். அது இயக்குனர் சுராஜிற்கு பிடிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு தளத்திலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதை தொடர்ந்தே, வடிவேலுக்கு நிகரான ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என விவேக்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

த்ரிஷா- ஆடுகளம்:

தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை பெற்ற படம் ஆடுகளம். இப்படத்தில் நடித்திருந்த டாப்ஸி இன்று பாலிவுட்டில் செம ஹிட் நாயகியாக வலம் வருகிறார். ஆனால், ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதில் த்ரிஷா தான் நடிக்க வேண்டியதாம். இதற்காக போட்டோஷூட்கள் கூட நடத்தப்பட்டதாம். ஆனால் அதே நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்துக் கொண்டிருந்த த்ரிஷா கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாது எனக் கூறினாராம். அதை தொடர்ந்தே, படக்குழு அவரை தூக்கிவிட்டு டாப்ஸியை ஓகே செய்திருக்கிறார்கள்.

விஜய்- உன்னை நினைத்து:

ஒரு சாப்ட் படமாக அமைந்தது உன்னை நினைத்து. இப்படத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்திருந்தனர். படத்தை விக்ரமன் இயக்கி இருந்தார். முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகர் விஜய். படத்தின் போட்டோஷூட்கள் முடிந்ததாம். ஆனால் அதை பார்த்த விக்ரமனுக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டதாம். அந்த காலத்தில் மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜயிற்கு இந்த கதாபாத்திரம் சூட்டாகுமா என்பதே அது. இதை தொடர்ந்தே, அவரை நீக்கிவிட்டு சூர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இதை படிங்க: தொடர்ந்து காதல் படங்களை தவிர்த்து வரும் நடிகர் விஜய்…! பின்னனியில் இருக்கும் காரணம்…

சலீம் கோஸ்- சகுனி:

கார்த்தி நடிப்பில் வெளியான படம் சகுனி. அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். அவருக்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் சலீம் கோஸ். அவரை மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம். ஆனால் சலீம் கோஸ் ரொம்பவே அலட்டிக்கொள்ளாமல் நடிப்பவர். அது அப்படத்திற்கு சூட் ஆகாமல் இருந்தது. அதனால், அவரை நீக்கிவிட்டு பிரகாஷ் ராஜை ஒப்பந்தம் செய்து வில்லன் பகுதியை மட்டும் மீண்டும் படமாக்கி இருக்கிறார்கள்.


சிலம்பரசன்-கோ:

இயக்குனர் கே.வி.ஆனந்தின் ஹிட் லிஸ்டில் முக்கிய படம் கோ. இப்படத்தில் ஜீவா நடித்திருக்க அவருக்கு நாயகியாக கார்த்திகா நடித்திருப்பார். ஆனால்,இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம். அதற்கான போட்டோசூட்களும் நடந்தது. நல்ல வரவேற்பும் படக்குழுவிடம் பெற்றதாம். ஆனால், சிம்பு எனக்கு கதாநாயகியை பிடிக்கவில்லை. தமன்னாவை அழைத்து வாருங்கள் என அடம் பிடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பட்ஜெட் அடிப்படும் என பலமுறை சொல்லியும் கேட்காததால், ஹீரோயினை எதுக்கு மாத்திக்கிட்டு அடம் செய்யும் ஹீரோவை மாத்துங்க என சிலர் சொல்லியிருக்கிறார்கள். இயக்குனரும் சிம்புவிடம் யூ கோ மேன் என துரத்தி விட்டாராம்.

Next Story