குணா படம் உருவானபோது நடந்த அடிதடி!.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதன் பின்னணி!..
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், குணச்சித்திரம் என கலக்கியவர்தான் ஜனகராஜ். 1978ம் வருடம் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 80,90களில் பல ரஜினி, கமல் படங்களில் ஜனகராஜ் நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் சிவா, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், அண்ணாமலை, படிக்காதவன் என பல படங்களில் நடித்திருக்கிறார். கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இப்போதுவரை பேசப்படும் நாயகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் அசத்தலாக நடித்திருப்பார். இந்த படத்தில் கமலுக்கும் ஜனகராஜுக்கும் இருக்கும் நட்பு தொடர்பான காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: ஏன் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழு இளையராஜாவை சந்திக்கல? ஒரு வேளை அப்படி எதும் இருக்குமோ?
ஆனால், கடந்த 20 வருடங்களாக அவர் சினிமாவில் நடிப்பது குறைந்துவிட்டது. இந்நிலையில், குணா படத்தின் போது எழுந்த பிரச்சனையால் இனிமேல் கமல் படங்களிலேயே நடிக்க கூடாது என ஜனகராஜ் எடுத்த முடிவு பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். குணா படத்தில் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வந்தார் ஜனகராஜ்.
அப்போது சந்தான பாரதியின் உதவியாளர் அழகப்பன், சந்தான பாரதி மற்றும் அந்த படத்தில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் இருந்தனர். ஒரு காட்சிக்கு ஜனகராஜ் பேசியதை அழகப்பன் ‘சரியாக இருக்கிறது’ என சொல்லிவிட்டார். ஆனால், ஆர்.எஸ்.சிவாஜி ஒன்ஸ்மோர் கேட்டிருக்கிறார். இதனால் அவருக்கும் ஜனகராஜுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இதில், இருவருக்கும் வார்த்தை தடித்து. இதில் கோபமடைந்த ஆர்.எஸ்.சிவாஜி ஜனகராஜை அடித்துவிட்டார். அவருடன் சந்தானபாரதியும் சேர்ந்து கொண்டார். இதனால் கிட்டத்தட்ட ஜனகராஜ் அங்கிருந்து ஓடும் நிலையே ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்டு கமல் மிகவும் வருத்தபட்டார்.
இதையும் படிங்க: அவங்க அவ்வளோ தரலை.. நீங்களும் இவ்வளோ தர கூடாது… சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்…
அதன்பின் ஜனகராஜை சமாதனம் செய்து டப்பிங் பேச வைத்திருக்கிறார்கள். ஆனால், சந்தானபாரதியோ, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் இருக்கக் கூடாது, அழகப்பன் மட்டுமே இருக்க வேண்டும்’ என ஜனகராஜ் சொல்ல அப்படியே நடந்தது. அதன்பின் கமல் படங்களிலேயே ஜனகராஜ் நடிப்பதை தவிர்த்துவிட்டார்’ என சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அழகப்பன் சொல்லி இருந்தார்.
இந்த ஆர்.எஸ்.சிவாஜி நிறைய கமல் படங்களிலும் நடித்திருக்கிறார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீஸ் அதிகாரியான ஜனகராஜ் ஒவ்வொரு முறையும் துப்பறியும் போது ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என வசனம் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தவர். சில மாதங்களுக்கு முன்பு இறந்தும் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.