More
Categories: Cinema News latest news

மாநாடு ரிலீஸ் ஆகாம போனதுக்கு இதுதான் காரணமா? உண்மையை மறைத்த தயாரிப்பாளர்…

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். சிம்பு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் இதுவாகும். இப்படம் அண்ணாத்த படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகவிருந்தது.

இதையும் படிங்க: 3 வருஷமா யோசிச்சு கார்ட்டூன் கதையை சுட்ட இயக்குனர்…அதிர்ந்து போன தனுஷ்….

Advertising
Advertising

ஆனால், சில காரணங்களால் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடியவில்லை எனக்கூறி நவம்பர் 24ம் தேதி இப்படம் வெளியாவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அண்ணாத்த படம் வருவதால் அதிகமான தியேட்டர்கள் மாநாடு படத்திற்கு கிடைக்காமால் போகும். எனவேதான் சுரேஷ் காமாட்சி இந்த முடிவை எடுத்தார் என கருதப்பட்டது. ஆனால், அதற்கு பின்னணியில் வேறு காரணம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

simbu

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு அவர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் அப்படம் முழுமையாகமலே வெளியானதால் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சில கோடிகள் வரை நஷ்டம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சி.எம் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்.. சிம்பு அம்மா ஆவேச பேட்டி

எனவே, சிம்பு தனக்கு ரூ.6 கோடி கொடுக்க வேண்டும் என அப்போதே ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு சிம்பு செல்லவில்லை. எனவே, அவர் மீது அறிவிக்கப்படாத ரெட் கார்டும் விதிக்கப்பட்டது. மேலும், சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு நடித்து கொடுக்கவில்லை சிம்பு.

இதைத்தொடர்ந்து, சிம்புவின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போதும் இது தொடர்பான பிரச்சனைகள் கிளம்புவதும், சிம்புவின் தாய் உஷா மற்றும் தந்தை டி.ராஜேந்தர் ஆகியோர் பஞ்சாயத்து பேசி படத்தை ரிலீஸ் செய்வதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. ஆனால், மைக்கேல் ராயப்பன் பிரச்சனை மட்டும் தொக்கி நிற்கிறது.

தற்போது மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பிரச்சனை மீண்டும் எழுப்பப்பட்டது. எனவேதான், மாநாடு படம் நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

உஷா ராஜேந்தர் நேற்று இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும் அவர் அடுக்கடுக்கான புகார்களை கூறியது குறிப்பிடத்தக்கது.

சிம்புன்னா பஞ்சாயத்து… பஞ்சாயத்துன்னா சிம்பு…..

Published by
சிவா