காமெடி நடிகரால் வீட்டை விட்டு ஓடிய நடிகர் திலகம்!.. அட இவ்வளவு நடந்திருக்கா!..

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் சிவாஜி கணேசனை சொல்வார்கள். ஏனெனில், அவர் ஏற்று நடித்த வேடங்கள் அப்படி. பராசக்தி முதல் பல படங்களில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். ஏழையாகவும் நடிப்பார். பணக்காரனாகவும் நடிப்பார். ரவுடியாகவும் நடிப்பார். மருத்துவராகவும் நடிப்பார்.

கடவுள் அவதாரங்களிலும் கலக்குவார். சரித்திர நாயகர்களாகவும், சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இராமன், பரதன், சிவன், கர்ணன் என பல வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சிவாஜிக்கு எப்போதும் பிடித்த விஷயமாக நடிப்பு மட்டுமே இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..

அவரின் உலகமும், பார்வையும் நடிப்பால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. நடிப்பு ஒன்றே உயிர் மூச்சி என கடைசி வரை வாழ்ந்தவர் நடிகர் திலகம். நடிப்பில் பல வெரைட்டிகளை கொடுத்திருக்கிறார். சிவாஜி சினிமாவுக்கு வருவதற்கு பலர் உதவியாக இருந்தாலும் அவர் நடிப்பை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு காமெடி நடிகரே காரணமாக இருந்திருக்கிறார்.

kakka

சிவாஜி திருச்சியில் சிறுவனாக வாழ்ந்து வந்தபோது அவரின் பக்கத்து வீட்டில் வசித்தவர்தான் காக்கா ராதாகிருஷ்ணன். நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட ராதாகிருஷ்ணன் திருச்சியில் வசித்து வந்த தியாகராஜ பாகவதரை சந்தித்து ‘நான் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என சொல்ல, அவரின் ஆர்வத்தை பார்த்த பாகவதர் ‘யதார்த்தம் பொன்னுசாமி’ நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க சொன்னார்.

இதையும் படிங்க: சிவாஜி படங்களில் நீக்கப்பட்ட முத்து முத்தான பாடல்கள் இவ்வளவு இருக்கா?.. எதற்காக தெரியுமா?

அவர் சொன்னபடியே அந்த நாடகக்குழுவில் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பல நாடகங்களிலும் நடித்தார். ஒருநாள் சொந்த ஊருக்கு வந்தபோது சிவாஜியிடம் அவர் தனது நாடக அனுபவம் பற்றி சுவையாக சொல்ல சிவாஜிக்கும் ‘நாமும் நாடகத்தில் நடிக்க வேண்டும்’ என்கிற ஆசை உருவானது.

அப்போது திண்டுக்கல்லில் யதார்த்தம் பொன்னுசாமியின் நாடக்குழு செயல்பட்டு வந்தது. இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறிய சிவாஜி அங்கு சென்று தான் ஒரு அநாதை என பொய் சொல்லி அந்த நாடகக்குழுவில் சேர்ந்து கொண்டாராம். அதன்பின் பல வருடங்கள் நாடகங்களில் நடித்த அவர் பராசக்தி படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.

kakka

சிவாஜிக்கு நடிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திய காக்கா ராதாகிருஷ்ணன் சிவாஜி சினிமாவில் நடித்தபோது அவரின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். தேவர் மகன் படத்தில் கூட அவரின் அண்ணனாகவும், நாசரின் அப்பாவாகவும் நடித்திருப்பார். அதேபோல், வடிவேல் காமெடி ஒன்றில் மூக்குப்பொடி போட்டு தும்முவது போல் சிக்னல் கொடுத்து வடிவேலுவை கோவை சரளாவுக்கு திருமணம் செய்து வைக்கும் வேடத்திலும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story