Connect with us
Sivaji Ganesan

Cinema History

சிவாஜி படங்களில் நீக்கப்பட்ட முத்து முத்தான பாடல்கள் இவ்வளவு இருக்கா?.. எதற்காக தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களில் இருந்து நிறைய நல்ல நல்ல முத்து முத்தான பாடல்கள் எல்லாம் சில காரணங்களால் படத்தில் இருந்து நீக்கப்பட்டன. அது என்னென்ன? ஏன்னு பார்ப்போமா…

1964ல் வெளியான கர்ணன் படத்தில் 17 பாடல்கள் இருந்தாலும் கொஞ்சம் கூட போரடிக்காது. 2012ல் ரீரிலீஸ் ஆனது. அப்போதும் ரொம்ப வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மகாராஜன் உலகை ஆளலாம் பாடல் ரொம்ப பிரமாதமா இருந்தது. ஆனாலும் படத்தில் இந்தப் பாடல் ஏனோ இடம்பெறவில்லை.

அவன் ஒரு சரித்திரம் படம் வருவதற்கு முன்பே என் மனது ஒன்று தான் பாடல் வந்தது. ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. இந்தப் பாடலை சிவகுமார் நடித்த பெருமைக்குரியவள் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஞான ஒளி படத்திற்காக உள்ளம் போ என்றது என்ற பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தில் இந்தப் பாடல் இடம்பெறவில்லை. எஸ்.பி.பி. பாடிய பாடல். வசந்தமாளிகை படத்திற்காக அடி யம்மா ராசாத்தி சங்கதி என்ன? இந்தப் பாடல் குத்துப் பாட்டா இருந்ததால் வைக்கவில்லை. பிராப்தம் படத்தில் இது மார்கழி மாதம் பாடல் செம கிளாஸா இருந்தது. ஆனால் படத்தில் வைக்கவில்லை.

தாய்க்கு ஒரு தாலாட்டு படத்திற்காக இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தில் இளமைக்காலம் எங்கே? என்று ஒரு பாடல் வரும். ஆனால் படத்தில் ஹம்மிங்கோடு நிறுத்தி விட்டார்கள். நான் வாழ வைப்பேன் படத்தில் எல்லோரும் வாழுங்கள். நல்வாழ்த்துப் பாடுங்கள் என்று ஒரு பாடல். சிவாஜி, ரஜினி நடித்த படம். இந்தப் பாடலை டிஎம்எஸ் பாடினார். அது கம்பீரமாக இருந்ததால் எஸ்.பி.பி.யை வைத்து பாட வைத்தார்கள். ஆனால் படத்தில் டிஎம்எஸ். பாடிய பாடல் இல்லை.

Vasantha Maligai

Vasantha Maligai

நிறைகுடம் படத்துக்காக அத்தான் நிறம் சிவப்பு பாடல் போடப்பட்டது. வி.குமார் இசை அமைத்தார். படத்தில் வாணிஸ்ரீ சிவாஜியைக் கிண்டல் செய்வது போல அமைந்திருக்கும். ஆனால் படத்தில் இது இல்லை. அதே போல பாலும் பழமும் படத்திற்காக தென்றல் வரும் சேதி வரும் என்ற பாடல் சூப்பராக போடப்பட்டது. ஆனால் படத்தில் வரவில்லை. அப்போது ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பினார்கள். படத்தின் நீளம் கருதி இந்தப் படத்தை எடுத்துவிட்டார்களாம். என்னைப்போல் ஒருவன் படத்தில் இழு இழு இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் என்று ஒரு பாடல். இது படத்தில் இடம்பெறவில்லை.

வாணி ராணி படத்திற்காக கட்டில் இடவா… பாடல் போடப்பட்டது. ஆனால் படத்தில் இது கிடையாது. ஞாயிறும் திங்களும் படத்திற்காக பட்டிலும் மெல்லிய பொண்ணிது பாடல். படமும் பைனான்ஸ் பிரச்சனையால் வெளிவராமலே போனது.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top