Cinema News
மாப்ள நீ செம கில்லாடி!… தலைவர் 171 படத்தை அவசரமாக அறிவித்தன் பின்னணி இதுதான்!.
தொலைக்காட்சி மூலம் மக்களிடம் அறிமுகமானதுதான் சன் நெட்வொர்க். இதன் நிறுவனர் கலாநிதி மாறன். 1992ம் வருடம் முதலில் சன் டிவியை துவங்கினார்கள். அதன்பின் பல மொழிகளிலும் சேனல்களை உருவாக்கினார்கள். சன் நெட்வொர்க் நிறுனத்திற்கு கிட்டத்தட்ட 30 சேனல்கள் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி மொழியிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது. மொத்தத்தில் சன் நெட்வொர்க் நிறுவனம் ஒரு பெரிய நெட்வொர்க்காக மாறியிருக்கிறது. பங்கு சந்தையில் கூட சன் நெட்வொர்க்கின் பங்கு டிரேடிங் ஆகி வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய தொழிலதிபர்களில் கலாநிதிமாறனும் ஒருவர்.
இதையும் படிங்க: கலாநிதி மாறன் கொடுத்த கவரில் இருந்தது இத்தனை கோடியா!.. அடேங்கப்பா தலையே சுத்துது!…
இவர்களின் திரைப்படங்கள் தயாரிக்கும் நிறுவனம் சன் பிக்சர்ஸ். பல வருடங்களாக இப்படம் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் அப்படி சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து ரூ.700 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஒருபக்கம், கடந்த சில வருடங்களாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விக்ரம் மெகா ஹிட்டுக்கு பின் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க ரஜினியும் விரும்பினார். இப்போது லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து இயக்கி வரும் லியோ பட வேலையில் இருக்கிறார்.
இதையும் படிங்க: இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..
இந்நிலையில்தான் திடீரென ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சில நாட்களுக்கு முன்பு திடீர் அறிவிப்பு வெளியானது. இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இந்த அறிவிப்பு குறித்து ஒரு நாள் முன்புதான் லோகேஷ் கனகராஜுக்கு சன் பிக்சர்ஸ் தரப்பு சொல்லியிருக்கிறது.
இவ்வளவு அவசரமாக தலைவர் 171 படத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன பலருக்கும் கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஜெயிலர் படத்திற்கு பின் பங்கு சந்தையில் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. அதை தக்க வைப்பதற்காகவே ரஜினி – லோகேஷ் பிராஜெக்ட் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் படம் ஆவரேஜ்தான்!.. அத தூக்கிட்டு போனது அவர்தான்.. அட சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாரே!…