AK64: திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் இருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்குப் பின் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற படத்தை இயக்கினார் ஆதிக். சிம்பு கொடுத்த குடைச்சலில் படத்தை சரியாக முடிக்க முடியாமல் எடுத்தவரை ரிலீஸ் செய்து படம் ஊத்திக் கொண்டது. இந்த படத்தால் தனக்கு 11 கோடி வரை நஷ்டம் என இப்படத்தின் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார் கொடுக்கும் வரை சென்றது. தற்போது வரை இந்த பஞ்சாயத்து முடியவில்லை.
அந்த படத்திற்கு பின் சிம்பு பக்கம் ஆதிக் போகவே இல்லை. பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கினார். அதுவும் ஓடவில்லை. அப்போதுதான் எச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்தது. அப்போது உங்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன் என ஆதிக் சொல்ல ‘ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்துவிட்டு வா.. கண்டிப்பாக பண்ணலாம்’ என அஜித் சொன்னார்.
எனவே விஷால் எஸ்.ஜே சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி என்கிற படத்தை இயக்கினார் ஆதிக். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே ஆதிக் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார் அஜித். அப்படி உருவான
குட் பேக் அட்லி சூப்பர் ஹிட் அடித்தது. அஜித்திற்கும் ஆதிக்கோடு வேலை செய்வது பிடித்து போனது. எனவே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ஆதிக்கிற்கு அஜித் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. வழக்கமாக ஆதிக்கின் படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைப்பார். இன்னும் சொல்லப்போனால் ஆதிக்கை இயக்குனர் ஆக்கியதே ஜிவி பிரகாஷ்தான். அவர் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டதால்தான் திரிஷா இல்லனா நயன்தாரா படமே உருவானது. அப்படி இருக்கும்போது அவரை விட்டுவிட்டு அனிருத் பக்கம் ஏன் ஆதிக் சென்றார்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.
இந்நிலையில், இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அனிருத்துடன் பழக்கம் ஏற்பட்டால் ரஜினியை வைத்து படம் பண்ணலாம் என ஆதிக் நினைக்கிறாராம். ஆதிக்கிடம் கதை சொல்லி அவருக்கு பிடித்தால் அவர் தன்னை ரஜினியிடம் அழைத்துச் செல்வார் என ஆதிக்கம் நினைக்கிறார். கூலி பட கதையை லோகேஷ் கனகராஜ் அனிருத்திடம் சொன்னபோது ’வா நான் தலைவரிடம் கூட்டிப் போகிறேன்’ என சொல்லி அனிருத் தான் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தார். இதுபோல அனிருத் மூலம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு அமையும் என ஆதிக் கணக்கு போடுகிறாராம்.
