கூல்ட்ரிங்ல் விளம்பரத்தில் அஜித்துக்கு எவ்ளோ காசு கிடைக்கும் தெரியுமா?!.. அம்மாடியோவ்!…

Published on: January 21, 2026
ajith
---Advertisement---

நடிகர் அஜித் கடந்த இரண்டு வருடங்களாகவே கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். சிறுவயதில் இருந்தே அஜித்துக்கு பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உண்டு. அவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் பல வருடங்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தார். இதில் அடிபட்டு அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. திருமணத்திற்கு பின் எந்த ரேஸிலும் அஜித் களந்துகொள்ளவில்லை. தற்போது கார் ரேஸில் தொடர்ந்து போட்டிட்டு வருகிறார்.

துபாய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது. அடுத்து துபாயில் நடக்கவிருக்கிறது. அதற்காக அஜித் தயாராகி வருகிறார், இந்நிலையில்தான், அஜித் சமீபத்தில் நடித்த Campa Energy குளிர்பான விளம்பரம் பல விமர்சனங்களையும் கிளப்பியிருக்கிறது. ‘இத்தனை வருடங்கள் விளம்பரங்களில் நடிக்காமல் இருந்த அஜித் மக்களின் உடல் நலத்தை பாதிக்கும் குளிர்பான விளம்பரத்தில் ஏன் நடித்தார்? என பலரும் அவரை சமூகவலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணிய்ல் உள்ள காரணம் பலருக்கும் தெரியாது. அஜித் நடித்த அந்த Campa Energy குளிர்பானம் ரிலையன்ஸ் நிறுவனத்தினுடையது. அஜித்குமாரின் கார் ரேசிங் அணிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டன கேம்பா எனர்ஜி முதலீடு செய்து இருக்கிறது.

ஒரு சீசன் கார் ரேசிங் நடத்த 25 கோடி முதல் 40 கோடி வரை செலவாகும் என்கிறார்கள். அதில் பாதி தொகையை கேம்பா கோலாவின் உரிமையாளர் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டி விடுகிறார்களாம். அதனால்தான் இந்த விளம்பரத்தில் அஜித் நடித்திருக்கிறார் என்ன சொல்கிறார்கள்.