ஒரே ஒரு படம்!.. ஜெமினியோடு நடிக்க மறுத்த எம்.ஜி.ஆர்!.. பிளான் பண்ணி வேலை பாத்திருக்காரு!..

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அப்படி 60களில் நடிக்கும்போதே பல கொள்கைகளை வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். சிகரெட் குடிப்பது போலவே, மது அருந்துவது போலவோ நடிக்க மாட்டேன், கெட்டவனாக நடிக்க மாட்டேன் என பல கண்டிஷன்களை போட்டவர் எம்.ஜி.ஆர்.

அதை கடைசி வரை நிரூபித்தும் காட்டினார். அப்படியே ஒரு எம்.ஜி.ஆர் கெட்டவனாக வந்தால் அவரை வேறொரு எம்.ஜி.ஆர் திருத்துவது போல இரட்டை வேடங்களில் நடிப்பார். தனது ரசிகர்கள் தன்னை பார்த்து கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சிகரெட் பிடிப்பது மற்றும் மது அருந்து போன்ற காட்சிகளில் அவர் நடிக்கவே இல்லை.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ரசிகராக கேப்டன் செய்த தரமான சம்பவம்!.. அவர் அப்பவே அப்படித்தான் போல!..

அதேபோல், தனது படங்களில் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு இருந்ததெல்லாம் பாமர ரசிகர்கள்தான். அதாவது கூலித்தொழிலாளி, சலவை தொழிலாளி, செருப்பு தைப்பவர், ரிக்‌ஷா ஓட்டுபவர் என வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தவர்களே அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள்.

அதேபோல, பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கக் கூடாது என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார். வளரும் நேரத்தில் சிவாஜியுடன் கூண்டுக்கிளி என்கிற படத்தில் நடித்தார். அதோடு சரி. அதன்பின் சிவாஜியுடன் இணைந்து அவர் நடிக்கவே இல்லை. அதோடு மட்டுமல்ல. எம்.ஜி.ஆரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களின் படங்களில் அவர் நடிக்க மாட்டார்.

இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன் நம்பியாருடன் எம்.ஜி.ஆர் போட்ட சண்டை!.. நடந்தது இதுதான்!..

60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் பீக்கில் இருந்தனர். அவர்களுக்கு பின்னரே மற்ற நடிகர்களும் இருந்தனர். ஜெமினி கணேசனுடன் இணைந்து முகராசி என்கிற படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அதன்பின் அவர் நடிக்கவில்லை.

அதற்கு காரணம், எம்.ஜி.ஆர் தன்னை போல எந்த நடிகரும் பிரலபமாவதை விரும்ப மாட்டார் என சொல்லப்படுகிறது. எனவேதான், முகராசி படத்திற்கு பின் ஜெமினி கணேசனுடன் எம்.ஜி.ஆர் இணைந்து நடிக்கவில்லை.

 

Related Articles

Next Story