---Advertisement---

Jananayagan: ஜனநாயகன் பற்றி விஜய் பேசமால் இருக்க இதுதான் காரணமா?!….

Published on: February 15, 2026
---Advertisement---

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் இதுவரை வெளியாகவில்லை. பொங்கலை குறி வைத்து கடந்த மாதம் 9ம் தேதி படத்தை விட திட்டமிட்டார்கள். ஆனால் தணிக்கை சான்றிதழ் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்திற்கு சென்றார். தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படம் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படம் தொடர்பாக தொடர்ந்த வழக்கை தயாரிப்பாளர் திரும்ப பெற்றார்..

விரைவில் படம் மறு தணிக்கை செய்யப்படவிருக்கிறது. ஜனநாயகன் திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகவில்லையெனில் மே மாதமே வெளியாகும் என்கிறார்கள். ஏனெனில் பள்ளி மாணவர்கள் தேர்வு, சட்டமன்றத் தேர்தல் என இரண்டு மாதங்கள் தியேட்டர் பக்கம் அதிகம் வரமாட்டார்கள்..

ஒருபக்கம் இந்த படத்தின் பிரச்சினையை பற்றி பலரும் பேசுகிறார்கள் ஆனால் இப்போது வரை விஜய் எதுவும் பேசவில்லை. இத்தனைக்கும் விஜய் அரசியலில் இருக்கிறார். ‘திட்டமிட்டே என் படத்தை முடக்குகிறார்கள்’ என்று விஜய் ஒரு வார்த்தை சொன்னால் அது பற்றிக்கொள்ளும். ஆனால் ஏனோ விஜய் அமைதியாக இருக்கிறார்.. ஜனநாயகன் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லும் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘சம்பந்தப்பட்டவரே அமைதியாக இருக்கும் போது நாங்கள் என்ன கருத்து சொல்வது’ என கேட்கிறார்கள்..

இந்நிலையில்தான் ஜனநாயகன் படம் குறித்து ஏன் விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்பதன் பின்னணி தெரிய வந்திருக்கிறது. முதல் காரணம் விஜய் எனும் நடிகருடைய பிரச்சனை இது. விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். எனவே ஜனநாயகன் படத்தை தனது அரசியல் மைலேஜுக்காக பயன்படுத்த வேண்டாம் என விஜய் நினைக்கிறாராம்..

இரண்டாவது இந்த படம் பற்றி விஜய் ஏதோ பேசப்போக அது படத்திற்கு மேலும் பிரச்சனையை கொடுக்கலாம் என விஜய் நினைக்கிறாராம். அப்படி நடந்தால் அது தயாரிப்பாளரை மேலும் பாதிக்கும். ஏற்கனவே இந்த படம் சொன்ன தேதியில் வெளியாகாததால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம்..

எனவேதான் ஜனநாயகன் வெளியாகும் வரை இந்த படத்தை பற்றி எதுவும் பேச வேண்டாம் என விஜய் நினைக்கிறாராம். அதோடு தவெக முக்கிய நிர்வாகிகளிடமும் ஜனநாயகன் பிரச்சனை பற்றி யாரும் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறாராம் விஜய்.