தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக இருக்கும் நடிகர்களுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. தொடர்ந்து இரண்டு மூன்று திரைப்படங்கள் தோல்வியை கொடுத்து விட்டால் கூட அவர்கள் அதற்குப் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது கடினமான விஷயமாக மாறிவிடுகிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிற்கு வரும்பொழுது முதலில் 3, மெரினா போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க:அந்த ஹீரோவை திட்டுவதற்காக வசனம் வைத்த பாக்கியராஜ்!.. அவருக்கு என்ன காண்டோ!..
அதன் பிறகு மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் கிடைத்தன. எடுத்த உடனேயே ஒரு கமர்சியல் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து காமெடி கதாநாயகனாக நடித்து வந்தார்.

இந்த சமயத்தில்தான் களவாணி திரைப்படம் மூலமாக பெரும் வரவேற்பை பெற்றார் நடிகர் விமல். சொல்லப்போனால் சிவகார்த்திகேயனை விட அதிக ரசிகர்களை கொண்டிருந்தார் விமல்.
சுதாரித்த சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்கிற திரைப்படத்தில் நடித்தனர். ஆனால் அதற்குப் பிறகு விமல் நடித்த திரைப்படங்கள் யாவும் வரிசையாக தோல்வி அடைந்தன.
ஆனால் சிவகார்த்திகேயன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவருக்கு பெறும் வரவேற்பை பெற்று தந்தது.

இதையும் படிங்க:ஃபிளாப் படம் கொடுத்த பெரிய இயக்குனர்கள்!. தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்ட 5 படங்கள்..
சில படங்களில் தொய்வு கண்டாலும் கூட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஒரு விஷயத்தால் மட்டுமே விமல் மாதிரி தோல்வியை காணாமல் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார்.
ஒருவேளை விமலும் அப்படி தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் தற்சமயம் சிவகார்த்திகேயனுக்கு நிகரான ஒரு கதாநாயகனாக இருந்திருப்பார்.
இதையும் படிங்க:துப்பாக்கி காட்டி ஷங்கரை மிரட்டிய தயாரிப்பாளர்.. பரிதாப நிலைக்குபோய் அவரிடமே வாய்ப்பு கேட்ட சோகம்..
