Cinema News
வெற்றி துரைசாமி இதற்காத்தான் லடாக் பகுதிக்கு போனாரா?!. வெளியான புதிய தகவல்!..
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, சென்னை மாநகர முன்னாள் மேயர் என பல பதவிகளிலும் இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணம் அரசியல் வட்டாரத்திலும், திரையுலகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி. 45 வயதான வெற்றி அப்பாவுடன் இணைந்து மனித நேய பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.
இதன் மூலம் பல மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி கொடுத்து அரசு வேலை வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார். ஒருபக்கம், அஜித்தை போல பைக்கில் ஊர் ஊராக போவதும் இவருக்கும் பிடிக்கும். அஜித் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பை ஓட்டப்போகும்போது அந்த குரூப்பில் வெற்றியும் இருப்பார்.
இதையும் படிங்க: வெற்றித்துரைசாமிக்கும் அஜித்துக்கும் அப்படி என்ன நெருக்கம்? ஓடோடி வந்ததன் காரணம்
உண்மையில், அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்ட வெற்றி அவரை அடிக்கடி சந்தித்து பேச அதன்பின் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அஜித்துடன் பல மாநிலங்களுக்கும் சென்று பைக் ஓட்டியிருக்கிறார் வெற்றி. அதனால்தான் அவரின் உடல் சென்னை வந்தபின் ஓடோடி வந்தார் அஜித்.
சில வருடங்களுக்கு முன்பு என்றாவது ஒரு நாள் என்கிற படத்தையும் வெற்றி இயக்கியிருந்தார். இந்த படத்தில் விதார்த் – ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்போது ஒரு புதிய படத்தை இயக்கும் முடிவில் இருந்தார். லடாக் அருகே ஹைனா என சொல்லப்படும் கழுதைப்புலிகள் அதிகமாக இருக்கிறது. லியோ படத்திலும் இதை லோகேஷ் பயன்படுத்தி இருப்பார்.
கழுதைப்புலியை படம் பிடிக்கத்தான் வெற்றி துரைசாமி அங்கே சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோதுதான் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சட்லெஜ் நதிக்குள் பாய்ந்திருக்கிறது. அதேநேரம், காரில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் வெற்றி காயத்துடன் உயிர் பிழைத்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவாஜி அத எப்பவோ பண்ணிட்டார்!.. பாரதிராஜா சொன்னது பொய்!.. இப்படி சொல்லிட்டாரே!…