விஜய் வேஷத்தை எனக்கு கொடுங்க!.. சண்டை போட்டு படத்திலிருந்து வெளியேறிய அஜித்!..

by சிவா |   ( Updated:2024-06-13 02:38:14  )
விஜய் வேஷத்தை எனக்கு கொடுங்க!.. சண்டை போட்டு படத்திலிருந்து வெளியேறிய அஜித்!..
X

அஜித் விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமாகி ஒன்றாகவே வளர்ந்தவர்கள். விஜய் அவரின் அப்பாவால் சினிமாவுக்கு வந்தார். விஜயை நாளைய தீர்ப்பு படம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். அதன்பின்னரும் விஜயையை வைத்து சில படங்களை இயக்கினார்.

அதன்பின் விக்ரமனின் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்தபின்னரே விஜயின் மார்க்கெட் டேக் ஆப் ஆனது. அந்த பக்கம் அமராவதி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அஜித். சாக்லேட் பாயாக சில படங்களில் நடித்தாலும் வான்மதி திரைப்படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்து அவரின் கேரியர் மாறியது.

இதையும் படிங்க: விஜய் பாட்டுக்கு ‘ஓகே’ சொல்லிட்டு மீனா பட்ட பாடு… இப்படி புலம்ப வச்சிட்டாங்களே…!

விஜய், அஜித் இருவருமே தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்தனர். விஜய் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அவரின் நண்பராக அஜித் நடித்தார். விஜய் காதலுக்கு மரியாதை ஹிட் கொடுத்தால், அஜித் காதல் கோட்டை படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இருவருக்குமான போட்டி என்பது அப்போதேதான் துவங்கியது.

ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பின் விஜயுடன் அஜித் இணைந்து நடித்த படம் நேருக்கு நேர். இது வஸந்த் இயக்கிய திரைப்படம். அஜித்தை வைத்து ஆசை ஹிட் கொடுத்ததால் வஸந்த் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடித்த படம் அது. ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படத்திலிருந்து அஜித் திடீரென விலகினார்.

Ajith, Vijay in Nerukku Ner

விஜயின் வேடத்தை எனக்கு கொடுங்கள். என் வேடத்தில் விஜய் நடிக்கட்டும் என அஜித் வஸந்திடம் சொன்னதாகவும், அதை வஸந்த் ஏற்காததால் அப்படத்திலிருந்து அஜித் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு, ஒரு புதுமுகத்தை அந்த வேஷத்தில் நடிக்க வைக்கிறேன் என சவால் விட்ட வஸந்த் சூர்யாவை அப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இப்படித்தான் சினிமாவுக்குள் வந்தார் சூர்யா. அதன்பின் வஸந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவில்லை. அதோடு, விஜயுடன் அவர் இணைந்து நடிக்கவே இல்லை. இனிமேலும் அது நடக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

Next Story