latest news

என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!…

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் கவுண்டமணி. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தவர் இவர் என்பது பலருக்கும் தெரியாது. நாடகங்களில் வில்லனாக செமயாக நடிப்பாராம் கவுண்டமணி. ஆனால், சினிமாவில் அவருக்கு கிடைத்தது எல்லாம் காமெடி வேஷம்தான். ஆனால், சில படங்களில் வில்லன், குணச்சித்திரம் எனவும் கலக்கி இருக்கிறார். 80,90களில் அசைக்க முடியாத காமெடி நடிகராக கவுண்டமணி வலம் வந்தார். அவருடன் செந்திலும் சேர்த்து அடித்த லூட்டிகளை […]

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான் கவுண்டமணி. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தவர் இவர் என்பது பலருக்கும் தெரியாது. நாடகங்களில் வில்லனாக செமயாக நடிப்பாராம் கவுண்டமணி.

ஆனால், சினிமாவில் அவருக்கு கிடைத்தது எல்லாம் காமெடி வேஷம்தான். ஆனால், சில படங்களில் வில்லன், குணச்சித்திரம் எனவும் கலக்கி இருக்கிறார். 80,90களில் அசைக்க முடியாத காமெடி நடிகராக கவுண்டமணி வலம் வந்தார். அவருடன் செந்திலும் சேர்த்து அடித்த லூட்டிகளை 80 கிட்ஸ் மறக்கவே மாட்டார்கள்.

இதையும் படிங்க: கவுண்டமணி – செந்தில் பிரிந்தது இதனால்தான்!. சோலோவா கெத்து காட்டிய கவுண்ட்டர் மன்னன்..

ஒருகட்டத்தில் திரைப்படங்களின் வெற்றிக்கே கவுண்டமணி காரணமாக இருந்தார். ஹீரோக்களுடன் இணைந்து எல்லா காட்சிகளிலும் வரும் அளவுக்கு முன்னேறினார். சில படங்களில் கதாநாயகனை விட கவுண்டமணி அதிக சம்பளம் வாங்கினார். ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளமாக வாங்கிய முதல் காமெடி நடிகர் கவுண்டமணி மட்டுமே.

பிரபு, சத்தியராஜ், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்களின் படங்களில் கண்டிப்பாக கவுண்டமணி இருப்பார். குறிப்பாக சத்தியராஜுடன் சேர்ந்து கவுண்டமணி செய்த அலைப்பறை சொல்லி மாளாது. இருவரும் திரையில் வந்தாலே சுமமா சரவெடிதான். ஆனால், ஒருகட்டத்தில் கவுண்டமணி சினிமாவில் நடிப்பது குறைந்துபோனது.

அப்போதுதான் வடிவேல், விவேக், சந்தானம் போன்றவர்கள் மேலே வந்தனர். எல்லா படங்களிலும் இந்த மூவரில் யாரேனும் ஒருவர் இருப்பார். கவுண்டமணிக்கு சக்கரை நோய் ஏற்பட்டது. இதனால் உடல் மெலிந்து போனது. கண்கள் உள்ளே போய் அவரின் முகமே மாறியது.

இதையும் படிங்க: கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருந்தார் கவுண்டமணி. அதில், தனது தோற்றத்தை திரையில் பார்த்த கவுண்டமணி ‘வேணாம்பா. என் முகமே மாறிடுச்சி.. இனிமே எனக்கு சினிமா வேண்டாம்’ என சொல்லி நடிப்பதை நிறுத்தியே விட்டார். அதன்பின்னர்தான் வடிவேலு முதலிடத்தை பிடித்தார்.

goundamani

ஆனால், சினிமா உலகம் கவுண்டமணியை விடவில்லை. அவ்வப்போது அவரை கட்டாயப்படுத்தி 49-ஒ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என சில படங்களில் நடிக்கவைத்தனர். இப்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். வயசானாலும் சிங்கம் சிங்கம்தான் என சொல்வது போல வலம் வருகிறார் கவுண்டமணி.

Author
சிவா ✓

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!… | Cinereporters