மீபகாலமாகவே 20, 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களை ரீ-ரிலீஸ் என்கிற பெயரில் மீண்டும் தியேட்டர்களில் திரையிட்டு கல்லாகட்டி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அதற்கு முக்கிய காரணம் விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வரை வசூல் செய்தது.. எனவே பல தயாரிப்பாளர்களுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.
அதைத்தொடர்ந்து விஜயின் சச்சின் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் ரஜினியின் பாட்ஷா, பாபா, படையப்பா போன்ற படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் வெளியாகவில்லை. எனவே இந்த நேரத்தில் தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்தார்.
ஆனால் திடீரென பொங்கலுக்கு சில படங்கள் வருவதாக தயாரிப்பாளர்கள் கேட்டதால் தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக தாணு செய்தி வெளியிட்டிருக்கிறார். ஆனால் இதன் பின்னணியில் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. ஜனநாயகன் படம் வராததால் விஜய் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள். எனவே பொங்கலை கொண்டாடும் மனநிலையில் அவர்கள் இல்லை.
எனவே இந்த நேரத்தில் தெறி படத்தை ரிலீஸ் செய்தால் விஜய் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்பது சந்தேகம்தான். ஒரு பக்கம் வா வாத்தியாரே உள்ளிட்ட சில புதிய படங்கள் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளதால் தெறி படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்காது. எனவே ரிலீஸ் தேதியை தள்ளி வையுங்கள் என தாணுவுக்கு நெருக்கமான தியேட்டர் அதிபர்கள் சொன்னதாக தெரிகிறது. அவர்கள் சொன்னதை புரிந்து கொண்ட தாணு தெறி ரீ-ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.