Leo vijay : விஜயின் லியோ படம் துவங்கியது முதலே இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் அவர் அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களை கட்டிப்போட்டது.
ஒரு ரசிகர் LCU (Lokesh Cinematic Universe) என சொல்லப்போக அதுவே பின்னர் லோகேஷின் அடையாளமாகி போய்விட்டது. மேலும், தான் இயக்கும் அனைத்து படத்திலும் பல நடிகர்களையும் நடிக்க வைக்கும் பழக்கமுடையவர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தில் கூட விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: லியோ ஃபீவர் ஓவர்… தளபதி 68 வீடியோவை களம் இறக்கும் வெங்கட்பிரபு… லீக்கான அப்டேட்!…
விக்ரம் படத்தில் முதல் பாதி முழுவதும் பஹத் பாசிலையும், விஜய் சேதுபதியையும் காட்டியிருப்பார். முதல் பாதியில் கமலுக்கு ‘ஆரம்பிக்கலாங்களா’ என்கிற வசனம் மட்டுமே இருக்கும். இதைத்தொடர்ந்தே ரஜினி கூட தனது ஜெயிலர் படத்தில் மோகன்லால் மற்றும் சிவ்ராஜ்குமாரை கேமியோ வேடத்தில் நடிக்க வைத்தார்.
லியோ படம் துவங்கியபோதும் இப்படத்தில் பலரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், சாண்டி, அர்ஜூன், சஞ்சய் தத் என பல பெயர்கள் சொல்லப்பட்டது. தற்போது படம் வெளியான நிலையில் அவர்கள் எல்லோருமே படத்தில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: படம் பார்க்க அங்க போய்ட்டாங்க!.. வசூல்லாம் போச்சி!.. புலம்பும் லியோ பட தயாரிப்பாளர்….
முதலில் அர்ஜூன் நடித்த வேடத்தில் விஷாலைத்தான் கேட்டுள்ளார் லோகேஷ். ஆனால், அவர் நடிக்கவில்லை. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய விஷால் ‘சில படங்களில் நடித்துக்கொண்டிருந்ததாலும், துப்பாறிவாளன் 2 படத்தை இயக்கி, நடிக்க வேண்டியிருந்ததாலும் எனக்கு நிறைய வேலை இருந்தது.
மேலும், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது என்பது எனக்கு சரியாக வராது. ஒரு நேரத்தில் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே என்னால் வாழமுடியும். இதை லோகேஷும் புரிந்து கொண்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என விஷால் சொல்லியிருந்தார்.
இதையும் படிங்க: வாரேவா!.. லியோ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!.. தயாரிப்பாளருக்கு போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா?..
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…