Connect with us

Cinema News

வாரேவா!.. லியோ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!.. தயாரிப்பாளருக்கு போன் பண்ணி என்ன சொன்னார் தெரியுமா?..

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த் அந்த படம் குறித்து தயாரிப்பாளர் லலித் குமாரிடம் பாராட்டு தெரிவித்ததாக சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் லியோ படத்தை பிரம்மாண்டமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். படத்தின் முதல் 60 நாட்கள் காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் அத்தனை நடிகர்களை வைத்து பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா?!.. கொஞ்சம் கதைக்கும் செலவு பண்ணியிருக்கலாம்!..

முதல் 10 நிமிடத்தில் வரும் அந்த ஹைனாவுடனான சண்டைக்காட்சி
இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த ஒரு காட்சிக்காகவே சுமார் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஹாலிவுட் தரத்தில் நிஜமான ஹைனாவை வைத்து படமாக்கியது போல உருவாக்கியது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 171 ஆவது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில் முன்னதாகவே லியோ திரைப்படம் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக் கூறி இருந்தார். லியோ ரிலீசான பின்னர் அந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போன் செய்து படம் நல்லா வந்திருக்கு, குறிப்பா படத்தின் புரொடக்ஷன் வேல்யூ சிறப்பாக உள்ளது என பாராட்டி உள்ளார்.

இதையும் படிங்க: கம் பேக்னா இப்படி இருக்கணும்!.. ஃபிளாப்புக்கு பின் சூப்பர் ஹிட் கொடுத்த 3 இயக்குனர்கள்…

லியோ படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் லலித் குமார் அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டிய விவரங்களை தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பேட்டியில் விஜய் சாருக்கு கிப்ட் ஏதாவது கொடுக்க வேண்டுமா என கேட்டேன். சம்பளம் கொடுத்திட்டீங்கள அதுவே போதும் என கூறிவிட்டார் என இன்னொரு கார் டிராமா நடக்காது என்பதை பேட்டியிலேயே உணர்த்தி உள்ளார் லலித் குமார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top