எல்லாம் பொய்யி!..நான் அத சாப்பிட மாட்டேன்.! அப்பவே கமல் ஸ்மார்ட்டுதான்!...
உலகநாயகன் கமல்ஹாசன் சிறுவயது முதல் சினிமாவில் இருந்து வருகிறார். அவரது 5 வயதிலேயே களத்தூர் கண்ணாம்மா எனும் படத்தில் அறிமுகமாகினார். சிறுவயதிலேயே பல விருதுகளை குழந்தை நட்சத்திரமாக வாங்கி குவித்தவர் கமல்ஹாசன்.
அவர் அதிபுத்திசாலி என்பது அவரது படங்களை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். அதே போல் தான் சிறுவயதில் இருந்து வந்துள்ளார். ஆம், சிறு வயதில் அவருடன் பணியாற்றிய அனுபவத்தை அவரை வைத்து பல சூப்பர் ஹிட் படஙக்ளை பின்னாளில் கொடுத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பகிர்ந்துள்ளார்.
அதாவது சிறு வயதில் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு காட்சி நடிகை சாவித்ரி உடன் இருந்துள்ளது. அதில், கமல்ஹாசன் அனாதை சிறுவன், மதிய வேளையில் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் அருந்தி இருப்பார்.
அதனை சாவித்திரி பார்த்து அருகில் அழைத்து சாப்பாடு ஊட்ட வேண்டும். இதுதான் காட்சி, அப்படி நடித்துக்கொண்டிருக்கும் போது சாவித்திரி கமலை அழைத்து, தன்னிடம் இருந்த உப்புமாவை ஊட்ட முயற்சிப்பார். ஆனால், கமல் அதனை உண்ண மறுத்துவிட்டாராம்
இதையும் படியுங்களேன் - தளபதியின் பீஸ்ட் படத்திலிருந்து முக்கிய விஷயம் இப்படி லீக் ஆயிடுச்சே.!?
காரணம் கேட்டால், இங்கு சினிமா செட்டில் எல்லாமே பொய்யாக இருக்கிறது. மரத்தில் மாங்காய் பார்த்தேன் அது பொய் பொம்மை, இட்லி பாத்திரத்தில் இட்லி பொய்யாக இருக்கிறது. இதனை பார்த்து தான் உப்புமாவும் எதோ மண்ணை அள்ளி வைத்திருப்பீர்கள் என வேண்டாம் என கூறினேன். என அந்த சிறு வயதிலேயேஅவ்வளோ தூரம் சிந்தித்து பேசியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். இதனை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.