அப்படிப்போடு… இது செம ட்விஸ்டால இருக்கு… இனிமேல் எப்பையும் மாஸ் தான் போல!
Inimel: சில வாரங்கள் முன்னர் ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் லோகேஷ் நடிக்கும் ஆல்பம் குறித்த ஒரு தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அதுகுறித்து மேலும் ஒரு சுவாரஸ்ய விஷயமும் இணையத்தில் கசிந்து ரசிகர்களை வாவ் சொல்ல வைத்து இருக்கிறது.
கோலிவுட்டின் ஆல்பம் பாடல்களுக்கான வரவேற்பு என்றுமே அதிகம் தான். அந்த வகையில், கட்சி சேர பாடலுக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது. இந்த பாடலை இசையமைத்தவர் சாய் அபயங்கர் தான். இவர் பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் என்பது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெலிட்டான காதலன் படத்தின் மியூசிக்…. யோசிக்காமல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம்…
இது ஒருபுறமிருக்க ஒற்றை பாடலின் ஹிட்டால் மிகப்பெரிய ரீச் கிடைக்கும் என்பதால் தற்போது கோலிவுட்டில் ஆல்பம் பாடலுக்கான மவுஸ் அதிகரித்து விட்டது. அந்தவகையில், தற்போது ஸ்ருதிஹாசன் இயக்கும் பாடலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறார். இனிமேல் எனத் தொடங்கும் இந்த ஆல்பம் பாடலின் வேலைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, இப்பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுத இருக்கிறாராம். இதை ரோல் ரிவர்ஸ் என்ற அப்டேட்டில் ஆல்பம் குழு சமீபத்தில் அறிவித்து இருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.
#Inimel Role Reverse is the new Contemporary Twist #Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey@ikamalhaasan #Mahendran @Dir_Lokesh @shrutihaasan @RKFI @turmericmediaTM @IamDwarkesh @bhuvangowda84 @philoedit #SriramIyengar @yanchanmusic @SowndarNallasa1 @gopiprasannaa… pic.twitter.com/JDl3POVLgp
— Magizhmandram (@magizhmandram) March 19, 2024
ஜாய் ஸ்டிக்குடன் வெளியாகி இருக்கும் இந்த ஆல்பத்தின் போஸ்டரில் வேறு தகவல்கள் வெளியாகவில்லை. ஆல்பம் எப்போதும் ரிலீஸாகும் என்ற தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..