நண்பனை கழட்டிவிட்டு அந்த நடிகைக்கு கை கொடுத்த உதயநிதி!.. இந்த முறை பட்ட நாமம் போடாமல் இருந்தால் சரி!

by Saranya M |   ( Updated:2024-02-01 08:47:37  )
நண்பனை கழட்டிவிட்டு அந்த நடிகைக்கு கை கொடுத்த உதயநிதி!.. இந்த முறை பட்ட நாமம் போடாமல் இருந்தால் சரி!
X

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரிலீஸ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் வாயை கொடுத்து வாழ்க்கையை தொலைத்த கதையாக சந்தானம் தனது படத்தின் புரமோஷன் மூலமே தனது படத்துக்கு வேட்டு வைத்துக் கொண்டார்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்த வாரம் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத வருத்தத்தில் இருந்த ரெட் ஜெயன்ட் நிறுவனம் கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள சைரன் 108 படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றி உள்ளது.

இதையும் படிங்க: கட்சியில் ஆள் சேர்க்க விஜய் போடும் மெகா பிளான்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!..

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக இதில், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். பிப்ரவரி 16ம் தேதி சைரன் திரைப்படம் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகிறது.

சைரன் எனும் டைட்டிலில் ஏற்கனவே ஒரு படம் வெளியான நிலையில், இந்த படத்துக்கு தணிக்கை செய்ய மாட்டோம் என சர்ச்சை வெடித்த நிலையில், கடைசியில் சைரன் பக்கத்தில் 108 என ஆம்புலன்ஸ் போன் நம்பரை சேர்த்து விட்டனர்.

இதையும் படிங்க: அதிரிபுதிரியாக வெளியான ‘ரோமியோ’ பட போஸ்டர்.. வேற வழியில்லாம தஞ்சம் அடைந்த விஜய் ஆண்டனி

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாக உள்ள சைரன் திரைப்படம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கு வெற்றிப் படமாக அமையுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story