More
Categories: Cinema News latest news

துணிவு படத்த வாங்குனாதான் அவதார் 2…அடாவடி பண்ணும் ரெட் ஜெயண்ட்..கடுப்பான விஜய்..

திரைத்துறையில் முக்கிய பங்கு வகிப்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள்தான். இவரை சுற்றித்தான் வியாபாரம் நடக்கும். என்ன படம் ரிலீஸ் ஆக வேண்டும்?..எந்த படத்திற்கு தியேட்டர் கொடுக்க வேண்டும்?…என்ன படத்தை தியேட்டரிலிருந்து தூக்க வேண்டும்?..எந்த படத்தை எடுத்துவிட்டு எந்த படத்தை திரையிட வேண்டும் என அனைத்தையும் தீர்மானிப்பது இவர்கள்தான்.

Varisu

இதில் யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் கைதான் ஓங்கும். இதுதான் பல வருடமாக திரையுலகில் நடந்து வரும் விஷயம் ஆகும். தற்போது இந்த பிரச்சனையில்தான் விஜயின் வாரிசு திரைப்படம் சிக்கியுள்ளது.

Advertising
Advertising

அதாவது விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு பெரிய படங்களும் வருகிற பொங்கலுக்கு, அதாவது அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதில், துணிவு திரைப்படத்தின் வினியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் வாங்கியுள்ளது. எனவே, வாரிசு படம் வெளியாவதை விட துணிவுக்கு அதிக தியேட்டர்களை வளைக்கும் வேளையை ஏற்கனவே அவர்கள் துவங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. இதுவே விஜயை அப்செட் ஆக்கியது. தற்போது மேலும் ஒரு தலைவலி வாரிசு படத்திற்கு வந்துள்ளது.

thunivu

அதாவது, ஹாலிவுட் படமான அவதார் 2 திரைப்படம் இந்த மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் வினியோக உரிமையையும் ரெட் ஜெயண்ட் நிறுவனமே பெற்றுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தை வாங்கும் தியேட்டர்களுக்கு மட்டுமே அவதார் 2 படத்தை கொடுப்போம் என ரெட் ஜெயண்ட் நிறுவனம் தியேட்டர் அதிபர்களிடம் செக் வைத்து வருகிறதாம். அவதார் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பல கோடிகளை வசூல் செய்தது.

இதையும் படிங்க: பாதி காட்டிட்டேன் போதுமா?!…பட்டன திறந்து காட்டும் கிரண்…ஹாட் புகைப்படங்கள்…

எனவே, அப்படத்தை தங்களின் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய தியேட்டர் அதிபர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், பொங்கலுக்கு வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு அவதார் 2 படம் இல்லை என ரெட் ஜெயண்ட் நிறுவனம் கறார் காட்டியிருப்பது அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Varisu

ஏற்கனவே அவதார் 2 வுக்கு அதிக விலை கேட்பதால் தியேட்டர்கள் அதிபர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் மொத்தமுள்ள தியேட்டர்கள் இருவருக்கும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் உதயநிதி தலையிட்டு சுமூக முடிவை எட்ட வேண்டும் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
சிவா

Recent Posts