புளூசட்ட போடுறதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?!.. மாறன் சொல்றதை கேளுங்க!...

by சிவா |   ( Updated:2024-07-20 01:34:01  )
புளூசட்ட போடுறதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?!.. மாறன் சொல்றதை கேளுங்க!...
X

முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் பத்திரிக்கைகளில், செய்தி தாள்களில் மட்டுமே ரசிகர்கள் படிப்பார்கள். எப்போது ஸ்மார்ட்போன் எல்லோரின் கையில் வந்ததோ அப்போதே யுடியூப் பிரபலமாகிவிட்டது. படிப்பதை விட வீடியோவாக பார்ப்பது பலருக்கும் பிடித்திருந்தது.

அப்போது சினிமா விமர்சனங்களை சிலர் யுடியூப்பில் சொல்ல துவங்கினார்கள். அப்படி தமிழ் திரைப்படங்களை தமிழ் டாக்கிஸ் என்கிற யுடியூப் சேனல் மூலம் விமர்சனம் செய்ய துவங்கியவர்தான் மாறன். இவர் நெல்லை பகுதியை சேர்ந்தவர். அந்த ஊர் பேச்சு வழக்கில், மசாலா படங்களையும், நடிகர்களையும் நக்கலடித்து அவர் பேசியது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.

இதையும் படிங்க: விஜயகாந்தை நல்லவருனு சொல்றீங்களே! அவருக்கு மேல ஒருத்தர் இருக்காரு.. யார சொல்றாரு?

விமர்சனம் என்கிற பெயரில் மசாலா படங்களின் மீது தனக்கு இருக்கும் கோபங்களை கொட்டி தீர்த்து வருகிறார் மாறன். திட்டினால் சண்டைக்கு வருவார்கள் என்பதால் அதையே கிண்டலடித்தும், நக்கலடித்தும் பேச துவங்கினார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என ஒருவரையும் இவர் விடவில்லை.

சகட்டுமேனிக்கு எல்லோரையும் கிண்டலடித்து பேசுவார். இதனால், அந்த நடிகர்களின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். அவர்கள் மாறனை அசிங்கமாக திட்டினாலும் எல்லோருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் பதிலும் சொல்லுவார். இவர் மீது சில இயக்குனர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது.

எவ்வளவு பெரிய பட்ஜெட், பெரிய நடிகராக இருந்தாலும் சரி கிழித்து தொங்க போட்டு விடுவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் இவரின் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். மாறன் எப்போது வீடியோ போடுவார் என பலரும் காத்திருப்பதுண்டு. ஆண்ட்டி இண்டியன் என்கிற படத்தை இவர் இயக்கியும் இருக்கிறார்.

இந்நிலையில், எதற்காக புளூசட்டை என்கிற கேள்வியை இவரிடம் கேட்டபோது ‘வாரம் ஒரு விமர்சனம் எனில் இருக்கும் சட்டைகளை திருப்பி திருப்பி அதையே போட முடியாது. வாரம் ஒரு புது சட்டை எடுக்க வேண்டும். அப்படி பார்த்தால் வருசத்துக்கு 52 சட்டை எடுக்க வேண்டும். எனவேதான், யூனிபார்ம் போல ஒரே சட்டையை போட நினைத்தேன். அப்படி பல நிறங்களை பார்க்கும்போது புளூ சட்டை சரியாக இருந்தது. எனவே, அதை தேர்ந்தெடுத்தேன். இப்போது புளூ சட்டை என்பதே எனது அடையாளமாக மாறிவிட்டது’ என மாறன் சொல்லி இருக்கிறார்.

Next Story