2வது நாளிலேயே ரெட்ரோ வசூல் இப்படி ஆகிவிட்டதே…! அவ்ளோதானா?

retro 2 nd day
Retro collection: சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நேற்று முன்தினம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டுப் படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் படம் சூர்யா காம்போ என்றதும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்திற்குச் சென்றனர்.
இந்தப் படத்திலாவது கம்பேக் கொடுக்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பில் சூர்யா ரசிகர்கள் வந்தனர். படத்தின் நீளம் அதிகம். ரொம்ப ஸ்லோவா இருக்கு. படம் முழுக்க முழுக்க சூர்யா வர்றார். படம் பார்க்கும்போது சில இடங்களில் கொட்டாவி வருவதாகவும் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த முறையாவது சூர்யா ஜெயித்து விடுவார் என்றால் படத்தை ஆன்லைனில் கசிய விட்டு விட்டார்களாம். அதனால்தானோ என்னவோ அடுத்த நாளே படத்தின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இனி சேக்நில்க் அறிக்கையின் படி படத்தின் 2 நாள் வசூல் என்னன்னு பார்க்கலாமா…
முதல் நாள் விடுமுறை என்றதால் கூட்டம் ஒரு எதிர்பார்ப்புடன் வந்தது. படத்தின் வசூலும் கணிசமாக இருந்தது. இந்திய அளவில் 19.25 கோடியை வசூலித்து இருந்தது. முதல் நாளிலேயே நல்ல வசூல். அனைத்து மொழிகளிலும் சேர்த்து 13.22கோடி வசூலை ஈட்டியுள்ளது.
முதல் நாள் வசூலைப் பொருத்தவரை நானியின் ஹிட் 3 படத்தை விட அதிகம். தமிழகத் திரையரங்குகளில் 79.91 சதவீதம் கூட்டம் நிரம்பின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2வது நாளிலேயே அந்த வசூல் எதிர்பாராத வகையில் குறைந்து போனது. 7.50 கோடிதான் வசூல் ஆகி உள்ளது. இதுவரை மொத்தம் 26.75 கோடி வசூல்.
பொதுவாக இப்போதைய ரசிகர்களுக்கு கேங்ஸ்டர் படங்கள் அலுத்து விட்டது போல. ஹீரோக்கள் எல்லாம் ஏன் கேங்ஸ்டர் கேங்ஸ்டர்னு போய்க்கிட்டே இருக்காங்க. இப்படி நடிச்சது போதும். இனிமேலாவது குடும்பம், காதல்னு படங்கள் கொடுங்க. அதுக்குத் தான் இப்போ வறட்சி.
அதனால தான் குடும்பஸ்தன், டிராகன் படங்கள் எல்லாம் சின்ன பட்ஜெட்டா இருந்தாலும் ஜெயித்தது. சாய்ஞ்சா செம்மறி ஆட்டுக்கூட்டம் மாதிரி ஒரே பக்கமா சாயாதீங்க. ரசிகர்கள் விரும்புற படங்களைக் கொடுங்க என்பது தான் நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.

இது ஒரு புறமிருக்க படத்தின் வசூலைப் பொருத்தவரை 2 நாளில் உலகளவில் 46 கோடி என்று தயாரிப்பு நிறுவனமே தெரிவித்துள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொதுவாக வியாழக்கிழமை படம் ரிலீஸ் ஆனால் வெள்ளிக்கிழமை கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும். போகப்போக பிக்கப் ஆக வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கணிசமாக வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.