பாலாபிஷேகம் எல்லாம் பழசு…பீர் அபிஷேகம் புதுசு… ரெட்ரோ ஃபேன்ஸ் அடாவடி..! வீடியோ பாருங்க!

beer abishekam retro
ரசிகன் இதுவரை புதுப்படங்கள் ரிலீஸ் ஆனால் ஹீரோக்களின் கட் அவுட்டுகள், படங்களுக்கு பாலாபிஷேகம் நடத்துவதைத் தான் பார்த்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு படி மேலே போய் ரசிகர் ஒருவர் பீரால் அபிஷேகம் செய்து அனைவரையும் அசர வைத்து விட்டார். எந்தப் படத்துக்குத் தெரியுமா?
நேற்று வெளியான சூர்யாவின் ரெட்ரோ படத்துக்குத்தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் ரசிகர் ஒருவர் இப்படி வெறித்தனம் காட்டி இருக்கிறார். அவர் பீரை ஒரு கையால் பொத்தியபடி பீச்சி வெறித்தனமாக சூர்யாவின் முகத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அடிக்கிற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சூர்யாவைப் பொருத்த வரை அகரம் கல்வி அறக்கட்டளை எல்லாம் வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பல உதவிகளைப் படிப்புக்காகச் செய்து வருகிறார். அப்போது படிங்கடா, படிப்புதான் முக்கியம்னு சொல்வாரு. ஆனா அவரு ரசிகர்களே இப்போது இப்படி ஒரு செயலை செய்து இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விட்டார்களே. இதற்கு என்ன சொல்லப் போகிறார்?

ரசிகர்களை வழிநடத்தும் பொறுப்பு அந்தந்த ஹீரோக்களுக்குத்தான் உண்டு. அவர்கள் தவறான பாதைக்குப் போகும்பட்சத்தில் அதை தைரியமாக சுட்டிக்காட்டலாம். சமீபத்தில் அஜித் கூட கடவுளே அஜீத்தே என்று கோஷம் போட்டதற்கு எனக்கு எந்தவிதமான பட்டமும் தேவையில்லை என்னை ஏகே, அஜித்குமார்னு அழைத்தால் போதும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலேயே ரசிகர்மன்றத்தைக் கலைத்தவர் அவர். ஆனால் சூர்யா என்ன செய்யப்போகிறார் என்பது போகப் போகத்தான் தெரியும்.
ரசிகன் என்றால் படத்தை ரசித்துவிட்டுப் போக வேண்டியதுதானே. இதற்கு இப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டுமா? இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை அவர்கள் செய்யும் வேலையில் காட்டலாமே என்பதுதான் நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
இந்த வீடியோவைக் காண:https://www.instagram.com/reel/DJHCEDPCfDi/?igsh=bXNqMTRodHF0amxw