ரெட்ரோ படத்தின் 3வது நாள் வசூல்… தேற வாய்ப்பு இருக்கா?

by sankaran v |   ( Updated:2025-05-03 20:59:28  )
retro surya
X

retro surya

Retro collection: ரெட்ரோ படம் சூர்யாவின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. சூர்யாவுக்குக் கம்பேக் கொடுக்குமா என்று தான் எல்லாரும் எதிர்பார்த்தனர்.

படம் முழுவதும் சூர்யா தான் வருகிறார். ஜோஜூ ஜார்ஜின் நடிப்பும் பிரமாதம். பூஜா ஹெக்டா அழகு பதுமையாக வருகிறார். யோகிபாபு தன் பங்கிற்குக் காமெடி செய்கிறார். சந்தோஷ் நாராயணனின் பக்காவான பின்னணி இசை படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. இடைவேளை வரை படம் மெதுவாகப் போகிறது.

அதன்பிறகு வேகம் பிடிக்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் ரசிகர்களை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. படத்தின் நீளம் அதிகம்தான். கதையைப் பொருத்தவரை வழக்கமான மசாலா சென்டிமென்ட் கதை தான். தந்தை ஒரு கடத்தல் காரன். சூர்யா அவரது வளர்ப்பு மகன். ஒரு கட்டத்தில் காதலிக்கும்போது தந்தைக்கு இடையே பிரச்சனை வருகிறது.

காதலி என்ன ஆனாள்? தந்தையுடன் வந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததா என்பது தான் கதை. படத்தில் கனிமா பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. மொத்தத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும் வசூலில் ஓரளவு படம் தேறி வருகிறது. இந்தப் படத்தின் வசூல் விவரம் என்னன்னு பாருங்க.

retro
retro

முதல் நாளில் 19.25கோடி, 2வது நாளில் 7.75 கோடி, 3வது நாளில் 7.75 கோடி என வசூலித்துள்ளது. உலகளவில் முதல் 2 நாள்களில் 46 கோடி வசூல் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. படத்தின் வசூல் இப்படியே போனாலே ஓரளவுக்கு தேறி விடும் என்று தெரிகிறது. ஏன்னா படத்தின் 2வது நாள் வசூல் குறைந்தபோதும் 3 வது நாள் வசூல் 2வது நாள் வசூலை அப்படியே மெய்ன்டைன் பண்ணியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கணிசமாக வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக தொடர்ந்து படங்கள் தோல்வி என்ற நிலையில் இந்தப் படத்தை வெற்றியாக்கணும்னு ரொம்பவே கடுமையாக உழைத்திருக்கிறார் சூர்யா. அதே நேரம் இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்யலாமா? இதை ரஜினி, விஜயே மறுத்து இருக்கிறார்களே என பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சூர்யா குறித்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story