ரெட்ரோ படத்தின் ஒரு வார வசூல்… கடையை சாத்த வேண்டியது தானா?

retro
Retro collection: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம்தான் சூர்யாவுக்குக் கம்பேக் கொடுக்கும்னு சொன்னாங்க. ஆனால் பல கலவையான விமர்சனங்களை சந்தித்து ஓரளவுக்கு தேறியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத சூர்யா படத்துக்கு இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
அதே நேரம் பல சமூக ஊடகங்கள் இந்தப் படத்தில் போய் நடிக்க சூர்யா எப்படி ஒப்புக்கொண்டார்? ரஜினி, விஜயே ரிஜெக்ட் செய்த கதை அல்லவா என்றெல்லாம் பேசி வருகின்றன. படத்தில் சூர்யாவுக்கு ஜோடி பூஜா ஹெக்டே. ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் மியூசிக் தெறிக்க விடுகிறது.

பிரம்மாண்டமான பொருள்செலவில் படம் உருவாகியுள்ளது. அதே நேரதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு வரிக்கதையை அழகா நேர்த்தியாக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்லப்பட்டுள்ளதே படத்தின் மைனஸ் என்கிறார்கள். மற்றபடி சூர்யா கடின உழைப்பைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ படத்தின் ஒரு வார வசூல் (இந்திய அளவில்) விவரம் வருமாறு:
முதல் நாளில் 19.25கோடி, 2வது நாளில் 7.75கோடி, 3வது நாளில் 8 கோடி, 4வது நாளில் 8.15கோடி, 5வது நாளில் 3.4கோடி, 6வது நாளில் 2.5கோடி, 7வது நாளில் 1.75கோடி என மொத்தம் 50.80கோடியை வசூலித்துள்ளது. உலகளவில் 104கோடியைத் தாண்டியுள்ளதாக 2 டி தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.