ரெட்ரோ படத்தோட பிளஸ், மைனஸ் என்ன? படத்துக்கு அந்தமான் தீவு அழகிகள்னு பேரு வச்சிருக்கலாமோ..!

by sankaran v |   ( Updated:2025-05-01 06:43:54  )
retro surya 2025
X

retro surya 2025

Retro review: கார்த்திக் சுப்புராஜோட இயக்கத்தில் வெளியாகி உள்ள ரெட்ரோ படத்துக்கு பாசிடிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தோட பிளஸ், மைனஸ் என்னன்னு பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில தகவல்களைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

படத்துல வில்லன் ஜோஜூ ஜார்ஜ். அவரோட விஸ்வாசமான வேலைக்காரனைக் கொன்னுடறாங்க. அவரது மகன் சூர்யா. அவனை எடுத்து வளர்க்குறாரு. தந்தை கடத்தல் தொழில் பண்றாரு. ஒரு கட்டத்துல தந்தைக்கும், மகனுக்கும் இடையே பிரச்சனை. இடையில சூர்யா, பூஜா ஹெக்டே காதல். பிரச்சனையில தந்தையோட கையை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறாரு சூர்யா. அடுத்து என்னாச்சுங்கறதுதான் கதை.

படத்துல என்ன பிளஸ்னா சூர்யாவோட நடிப்பு. டிரெய்ன் சீன். சிரிக்கவே மாட்டேங்கறாரு. அதை சூப்பரா பண்ணிருக்காரு. சந்தோஷ் நாராயணனின் இசை. கனிமா பாடலே சாட்சி. ஒரு சீன்ல 15 நிமிஷம் கட்டே இல்லாம நான் ஸ்டாப்பா போகுது. இதுக்கு இடையில் இளையராஜா பாடல் ஒண்ணு வருது. டைட்டில் கார்டுலயே நன்றி போட்டுருக்காங்க.

ஜோஜூ ஜார்ஜ் ஆக்டிங் ரொம்ப சூப்பரா இருக்கு. படத்துல நெகடிவ்ஸ் என்ன? ஸ்க்ரீன்பிளே சீட்டுக்கட்டைக் கலைச்சிப் போட்ட மாதிரி இருக்கு. 80ஸ்ல நடக்குற கதைன்னு சொல்லிட்டு இப்ப உள்ள பொருளை எல்லாம் காட்டுறாங்க. அந்தமான்ல நடக்குற காட்சிகள்ல நம்பகத்தன்மை குறைவா இருக்கு.

இது சூர்யாவுக்கு கம்பேக்னு சொல்லலாம். அவரோட உழைப்பை நிறைய போட்டுருக்காரு. படம் முழுக்க சூர்யா, ஜோஜூ ஜார்ஜ் தான் இருக்காங்க. படத்தோட இடைவேளையில ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்தான் ஞாபகம் வருது. நிறைய சீன் பண்ணனும்கறதுக்காக திரைக்கதையை ரொம்ப இழுத்துருக்காரு இயக்குனர். ஒரு கட்டத்துல கொஞ்சம் போரடிக்குது. இடைவேளைக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜோட டச் இருக்கு. இது ரஜினிக்காக சொன்ன கதைன்னு கார்த்திக் சுப்புராஜ் சொன்னாராம்.

எனக்குத் தெரிஞ்சி சிம்புவுக்காக சொல்லி நிராகரிக்கப்பட்ட கதையான்னும் தெரியல. இந்தப் படத்துல வில்லன் கேரக்டரை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க் பண்ணி இருக்கலாம். படத்துக்கு ரெட்ரோன்னு வச்சதுக்குப் பதில் அந்தமான் தீவின் மர்மங்கள். அந்தமான் தீவின் அழகிகள்னு வச்சிருக்கலாம். அப்படி வச்சிருந்தா நல்லாருந்துருக்காது. படத்துல செகண்ட் ஆஃப் ஃபுல்லா அந்தமான் தான் வருது. சூர்யாவோட ரசிகர்கள் கொண்டாடிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story