ரெட்ரோ டிரெய்லர்ல ஒரு மண்ணும் இல்லை.. போட்டு பொளக்கும் பிரபலம்!..

by sankaran v |   ( Updated:2025-04-20 21:24:05  )
retro movie
X

retro movie

Retro: சிவகுமார் ரெட்ரோ படவிழாவில் பேசும்போது யாருமே சூர்யாவுக்கு முன்னாடி எவனுமே சிக்ஸ் பேக் வச்சதுல்லன்னு பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இதற்கு நெட்டிசன்கள் விக்ரம் தில் படத்திலேயே சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து விட்டார். அப்படிப் பார்த்தா சூர்யாவை விட உடலை வருத்தி நடிப்பதில் விக்ரம் தான் பெஸ்ட்னும் சொல்லிட்டாங்க. அந்த வகையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க.

சிவகுமார் தன் மகன் மீதுள்ள பாசத்துல சொல்லிருக்கலாம். இரண்டாவது போன படத்துக்கு உள்ள எதிர்மறை விமர்சனங்களால சொல்லிருக்கலாம். அடுத்ததா சூர்யாவுக்கு தியேட்ரிக்கல் ஹிட்டுன்னு எதுவுமே இல்லை. அப்படிங்கற கோபத்துல பேசிருக்கலாம். ஒருவேளை இந்தப் படத்தை பார்த்திருக்கலாம். அதையும் தாண்டி எவனுமே தமிழ்சினிமாவுல வச்சதில்லன்னு பேசுன வார்த்தை சீனியரைச் சொல்றது. பியு.சின்னப்பா, தியாகராஜ பாகவதருக்கு எல்லாம் சிவகுமார் முன்னோடியான்னு நான் கேட்குறேன்.

எனக்கு தெரிஞ்சி முதல்ல சிக்ஸ் பேக் வச்ச நடிகர் வந்து மொட்டை ராஜேந்திரன்தான். அவர் ஸ்டண்ட் நடிகர். அவரை நான் கடவுள் நடிச்சதுக்கு அப்புறம்தான் பலருக்கும் தெரியும். அவரும் ஸ்டண்ட் நடிகரா 1000த்துக்கும் மேற்பட்ட படத்துல நடிச்சிருக்காரு. பிதாமகன் சூட்டிங் தேனில நடந்தது. 8 அடி உயரத்துல இருந்து அனாயசமா ஜம்ப் பண்ணி விழுறாரு. பாலா பார்த்துக்கிட்டே இருந்து அவரைக் கூப்பிட்டு விசாரிக்க எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர்.

உடலில் கவனம் செலுத்துபவர் என்றதும்தான் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தாராம். நேரு உள்ளரங்கத்தில் நடந்த ரெட்ரோ டிரெய்லர் விழாவுக்கு எந்தவித வரவேற்பும் இல்லை. யாரும் பாஸ் கூட கேட்கல. இதே இடத்தில்தான் கங்குவா பட ஆடியோ லாஞ்சும் நடந்தது. அப்போ தயாரிப்பாளர் இந்த பாஸ் எல்லாம் பத்திரமா வச்சிக்கோங்கன்னு எல்லாம் ஓவரா சொன்னார். 2000 கோடி அடிக்கும்னு கூட சொன்னாங்க. இன்னைக்கு மக்கள் சோஷியல் மீடியாவை நம்புறாங்க.

கன்டன்ட் நல்லா எடுத்தா ரசிகர்கள் படத்தை ஓட வைப்பாங்க. டிரெய்லர் பெரிய வித்தியாசமா பண்ணிருக்காங்க. ஆனா என்னைப் பொருத்தவரைக்கும் அந்தளவு இல்லை. ஒரு கேங்ஸ்டர் இருக்கு. திரும்ப திரும்ப கலைச்சிப் போட்ட மாதிரி இருக்கு. அது எனக்குப் பெரிய இம்ப்ரஸிவ் ஏற்படுத்தல. கார்த்திக் சுப்புராஜ் பேட்ட எந்தளவு ஹிட் கொடுத்ததோ அதைக் கொடுத்துருக்கேன் என்றார். அவரு சொல்லித்தான் ஆகணும். டிரெய்லரை வச்சி படத்தை முடிவு பண்ண முடியாது. இதை நல்லா பண்ணிருக்கலாமேங்கறதுதான் என்னோட கருத்து என்கிறார் செய்யாறு பாலு.

Next Story