15 நிமிட சிங்கிள் ஷாட்ல தெறிக்க விடுறாராம் சூர்யா… ரெட்ரோ டுவிட்டர் விமர்சனம்

retro surya
Retro movie review: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் ரெட்ரோ. இந்தப் படம் சூர்யாவுக்கு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படம். நீண்டகாலமாக தோல்விகளையே கொடுத்து வந்த சூர்யாவுக்கு இது பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமையும் என்கிறார்கள்.
படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அவர் ஏற்கனவே பீட்ஷா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.
முதன்முதலாக சூர்யாவுடன் இணைந்து படத்தில் பணியாற்றி இருப்பது பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர சூர்யாவின் முந்தைய படமான கங்குவா பெரிய அளவில் ட்ரோலில் சிக்கியது. அதற்காக இந்தப் படத்தில் வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சூர்யா உள்ளார்.
படத்தைப் பார்த்து வரும் ரசிகர்கள் இடைவேளை வரை படம் வெறித்தனமாக இருக்கிறது என்கிறார்கள். இனிமே தான் ஆக்ஷன் காட்சி என்றும் டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள். சூர்யாவை எப்படி எப்படி எல்லாம் அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பினார்களோ அப்படி எல்லாம் பார்க்க முடிகிறதாம். ஒருவேளை இதுவும் ஃபேன் பாய் படமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

படத்தில் ஹைலைட்டே அந்த 15 நிமிட திருமணக் காட்சி தானாம். இதை மிகவும் அருமையாக எடுத்திருக்கிறார்களாம். நாடகம், நடனம், சண்டை, உணர்ச்சிகள் என்று படத்தில் களைகட்டுதாம். கார்த்திக் சுப்புராஜ் புத்திசாலித்தனமானவர் என்றும் ரசிகர்கள் டுவிட்டரில் பாராட்டியுள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் கனிமா பாடல் பட்டையைக் கிளப்புகிறதாம்.
இன்று மே தினம். உழைப்பாளர்கள் தினம் என்பதாலும், விடுமுறை என்பதாலும் தியேட்டரில் திருவிழாக்கூட்டமாக உள்ளது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.