சூர்யாவுக்குக் கம்பேக் கொடுக்குமா ரெட்ரோ? என்ன சொல்கிறார் பிரபலம்?

retro surya
Retro movie: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ படம் வரும் மே 1ல் திரைக்கு வருகிறது. இந்தப் படம் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
படத்துல என்ன காட்சியைப் புதுசா வச்சிருக்காருங்கறதைப் பொருத்துத்தான் இருக்கு. லவ் ஆக்ஷன்னா என்னன்னு தான் முக்கியம். இன்ஸ்டா ரீல்ஸ் மாதிரி தான் படங்கள் ஆகிடுச்சு. ஒவ்வொரு காட்சியும் நல்லா இருந்தா போதும். அதைத்தாண்டி ஒரு முழு கதையும் மொத்தமா நல்லாருக்கணும்கற அவசியம் இல்லாத அளவுக்கு ரசிகர்கள் தயாராகிட்டாங்க. புடிக்கிற காட்சிகளை சுவாரசியமா புடிச்சி அங்கங்கே வச்சிட்டா போதும்.
அப்படி வந்து ரெட்ரோ படத்துல காட்சிகள் இடம்பெற்றிருக்காங்கறது எல்லாம் படத்தைப் பார்த்தா தான் தெரியும். கார்த்திக் சுப்புராஜ் மொத்தமா லவ் ஆக்ஷன்னு சொல்றாரு. கேங்ஸ்டர் படம் கிடையாதுன்னு சொல்றாரு. கார்த்திக் சுப்புராஜ் படம்னாலே அப்படித்தான் இருக்கும். ஆனா அப்படி நினைக்காதீங்கன்னும் சொல்றாரு. டிரைலரைப் பார்த்தாலே தெரியும்.

அடிதடியில இருந்த ஒரு பையன் காதலுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருக்கான்கறதுதான் அதுல வருது. அதுக்கு அப்புறம் அந்தக் காதல் நிறைவேறி என்னாகுதுங்கறதுதான் கதை. சண்டைக்கோழி படத்துல வந்து இவன்தான் வில்லன்னு தெரியும்போது விஷால் கீழே இறங்கி ஓடுவாரு. அப்படின்னா நாம பயந்துக்கிட்டுதான் ஓடுவாருன்னு நினைப்போம். ஆனா பின்னாடி வழியா வந்து அடிப்பாரு. அதுதான் சீனு.
அந்த மாதிரி ஒண்ணு ரெண்டு சீனு இருந்தாலே அதுவே படத்தை இழுத்துட்டுப் போயிடும். அந்த மாதிரி இவரு படத்துல என்ன வச்சிருக்காருன்னு தெரியல. சூர்யாவுக்கு இந்தப் படம் ஒரு சவால். சூர்யாவுக்கு எதிரா அரசியல் நடக்குதுன்னும் சொல்றாங்க. படம் ஓடுச்சுன்னா அவங்க முகத்தை எங்கே கொண்டு வைப்பாங்கன்னு தெரியல என்கிறார் அந்தனன்.
அதே மாதிரி சூர்யா நடித்து அவரே மெகாபட்ஜெட் படமா எடுக்குறது இல்லை. புது கதையை பண்ணும்போது அதை ஒரு எக்ஸ்பிரிமண்டா பார்க்குறாங்க. ஆனா அது கிடையாது. விடாமுயற்சி படம் அவரு பண்ண வேண்டியதா? கங்குவாவை எல்லாம் சூர்யா தொடவே கூடாது. கதை கேட்கும்போதே தெரியணும். அதைத்தாண்டி இவங்க கமிட்டாகுறாங்கன்னா ஒரு பக்கம் சம்பளம். இன்னொரு பக்கம் யாரோ படம் எடுக்குறாங்கன்னு நம்ம காசா போகுதுன்னு பண்றாங்க.
ஆனா அவங்க கெரியர் போயிடுமேன்னு இப்பதான் தெரியுது. நாலு படம் இப்படி பண்ணினா அஞ்சாவது படம் பார்க்க ஆளே வரமாட்டான் என்கிறார் அந்தனன். நீண்ட காலமாக சூர்யாவின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அவருக்கு இது கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம்தான். மே 1ல் பார்க்கலாம்.